Monday, July 13, 2026
Home Blog Page 35

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

0

6-3-2026  கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.வீ. ஸ்டாலின்மணி தலைமையில் நடைபெற்றது. ஏ சண்முகம். சி. பெரியசாமி ஆர். குணசேகரன் பி. மணி முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி மாநில பொருளாளர் கே.பி. பெருமாள் பேசினார் மற்றும் மாவட்ட பொருளாளர் எம்.சி. ஆறுமுகம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் எஸ். ஜோதிராமன் மாவட்ட துணை செயலாளர்கள் எம். வி. ஏழுமலை ஜி. அருள்தாஸ் ஜி. மணிமாறன் மாவட்ட துணைத்தலைவர்கள் பி. தெய்வீகன். கே. அய்யனார் வி. தொ. ச.மாவட்ட தலைவர் அ. பா. பெரியசாமி ஆகியோர் கலந்து கோண்டனர் ஆர்ப்பாட்டத்தில் 300 விவசாயிகள் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகள்1.கள்ளக்குறிச்சி மாவட்டம். நயினார்பாளையம் கிராமம் மணிமுத்தாறு நதிக்கரையில் மனித கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைந்தாள் விவசாயத்துக்கும் சுற்றுச்சூழல் பாதிக்கும் துர்நாற்றம் வீசும் குடிநீர் ஆதாரங்கள் அழியும் எனவே இந்த திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்.

2. திருநாவலூர் ஒன்றியம் ஒரத்தூர் முதல் களர்குப்பம் வரை பாதூர் முதல் சேஷநதி வரை வயல் வெளிசாலை அமைத்திடவும் ஆனல மடுவு குட்டையை ஆழ படுத்திட வலியுறுத்தியும்
3. திருநாவலூர் ஒன்றியம் செம்மணங்கூர் முதல் நெமிலி பஸ் நிறுத்தம் வரை வயல்வெளிச்சாலையை தார்சாலையாக அமைத்து கொடுக்க கோரியும்.
4. தியாகதுருகம் ஒன்றியம் சிறுநாவலூர் ஊராட்சி சித்தேரிக்கரை செல்லும் சாலையை உடனடியாக சீர் செய்து தரகோரியும்.
5. உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எம். குன்னத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து கிளியூர் சிவன் கோயில் வரை உள்ள வயல்வெளிச்சாலையை சீரமைத்து தரகோரியும்
6. கள்ளக்குறிச்சி மாவட்ட திட்ட அலுவலர் ராமேஷ் குமார்.கான்ட்ராக்ட்டர் காரர்களுக்கும் கமிஷன் கொடுப்பவர்களுக்கும் ராஜை மரியாதை உடன் வரவேற்பு தருவதும்.. விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக மனு கொடுக்க சென்றால் விவசாய சங்க தலைவர்களை அவமரியாதை செய்யும் திட்ட இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் முதல் கோரிக்கையான நயினார்பாளையம் மணிமுத்தாறு நதிக்கரையில் மனித கழிவுகளை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்து உத்தரவு விட்டுள்ளது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

இவண்
ஏ. வீ. ஸ்டாலின்மணி.
மாவட்ட செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம்

கண்டாச்சிபுரம்,வீரங்கிபுரம் அருகே அரசு மதுபான கடை அமைப்பதை நிறுத்த கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை

0

மார்ச்-02/2026 கண்டாச்சிபுரம்.

தும்பரமேடு (வெண்மணிநகர்), குடியிருப்பு, (மற்றும்) அரசு துணை வேளாண்மை துறை கட்டிடம், தனியார் பள்ளி வளாகம், ஆகிய இடங்களுக்கு அருகாமையில் தேசிய நெடுஞ்சாலையில் (டாஸ்மார்க்) மதுபான கடையினை அமைப்பதை கைவிடக்கோரியும்

மழவந்தாங்கள் கூட்ரோடு அருகில் உள்ள மதுபான கடை அருகில் சுமார் 45-வயது உள்ள ஒரு விவசாயியை படுகொலை செய்யப்பட்டதை கிராம மக்கள் வன்மையாக கண்டித்து மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்

மேற்கண்ட மதுபான கடையினை கண்டாச்சிபுரம் குடியிருப்பு பகுதி வீரங்கிபுரம் எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில், மற்றும் தனியார் பள்ளி வளாகம், அரசு கட்டிடம் உள்ள இடத்தில் தற்போது கடையினை அமைப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்

மேலும் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகங்கள் மேற்கண்ட இடத்தில் கடை அமைப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும் இல்லை என்றால் பொது மக்களோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்து கட்சியும் இணைந்து மாபெரும் போராட்டத்தை நடத்திடுவோம் என

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டாச்சிபுரம் கிளை.சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்

ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டு முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

0

வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள திருமலைச்சேரி மற்றும் புதுப்பாடி கிராமங்களின் அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு ரூ.200.66 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்..

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டங்களில் உள்ள திருமலைச்சேரி மற்றும் புதுப்பாடி கிராமங்களின் அருகே உள்ள பாலாறு அணைக்கட்டு 5.200.66 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதை காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்ததை தொடர்ந்து, மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பாலாறு அணைக்கட்டில் குத்து விளக்கேற்றி வைத்து. பார்வையிட்டார்.

பாலாறு அணைக்கட்டானது பாலாறு ஆற்றின் குறுக்கே 244 கி.மீட்டரில் வாலாஜா வட்டம் திருமலைச்சேரி மற்றும் ஆற்காடு வட்டம் புதுப்பாடி ஆகிய கிராமங்களுக்கிடையே 1858-ஆம் ஆண்டு அணை கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டானது 801 மீட்டர் நீளமும், 3.10 மீட்டர் உயரமும் கொண்டதாகவும், ஆண்டிற்கு 150 மி.கன அடி நீரினை தேக்கி வைக்கும் வகையிலும், அதிகப்படியாக வினாடிக்கு 1,75,000 க.அடி வெள்ளநீர் வெளியேறும் வகையிலும், இரு புறங்களிலும் 39 மணற்போக்கிகள் மற்றும் 84.26 கி.மீ நீளம் கொண்ட 4 பிரதான கால்வாய்கள் வழியாக ஒரே நேரத்தில் வினாடிக்கு 6124 கன அடி தண்ணீர் திருப்பும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அணைக்கட்டு புனரமைக்கும் பணிக்கு மாநில நீர்வளத்துறை அமைச்சர் அவர்களால் 31.01.2025 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, 20.02.2026 அன்றுடன் பணி முழுமையாக முடிக்கப்பட்டது. மேலும் இந்த 4 அணைக்கட்டிலிருந்து செல்லும் பிரதான கால்வாய்களின் மூலம் இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் திருவள்லூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சார்ந்த வேகவதி, செய்யாறு, கீழ்பாலாறு. கொசஸ்தலையாறு, கூவம், அடையாறு ஆகிய உபவடிநிலங்களில் உள்ள 319 ஏரிகளுக்கு நீர் வழங்கி அதன் மூலம் சுமார் 77510.65 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக பாசன வசதி பெறும். மேற்கண்ட ஏரிகளின் மொத்த கொள்ளளவு 10 டி.எம்.சி ஆகும். இந்த அணைக்கட்டு புனரமைத்ததின் மூலம் 4 மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 4,25,000 மக்கள் பயன் பெறுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம், நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு.வெங்கடேஷன், உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் துறை சங்கம் சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம்

0

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒன்பது அம்ச சுகாரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது

ராணிப்பேட்டை மாவட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக கருப்பு பேச் அணிந்தபடி தொடர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

போராட்டத்தின் போது தெரிவிக்கப்பட்டதாவது

சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் மேலும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10% பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும் மேலும் TAPS திட்டத்தில் கிராம உதவியாளர்கள் முழுமையான பயன்களை பெறுவதை அரசு உறுதி செய்திட வேண்டும்

பணியின் போது உயிர் நீக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு கருணை அடிப்படை பணி நியமத்திற்கான உச்சவரம்பு 25 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பதாம் அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கருப்பு பேட்ச் அணிந்தபடி இரண்டாவது நாளாக தொடர் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மயிலம் அல்லது விக்கிரவாண்டி தொகுதி ஒதுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம்

0

காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கிட வலியுறுத்தி மயிலம் வட்டார கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்*

விரைவில் நடக்க இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மயிலம் அல்லது விக்கிரவாண்டி தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கித் தரக் கோரியும் அப்படி ஒதுக்குகின்ற தொகுதியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் R.P.ரமேஷ் -க்கு சீட் வழங்க கோரியும் மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

25 2 2026 புதன்கிழமை காலை 10:30 மணி அளவில் மயிலம் தையல்நாயகி என்னும் தனியார் திருமண மண்டபத்தில் மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது

வட்டாரத் தலைவர் மெடிக்கல் M.செல்வம் தலைமை தாங்கினார்.

வட்டார தலைவர்கள் J.காத்தவராயன், R.இளவழகன், K.N.புவனேஸ்வரன், நகர தலைவர் V.P.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன் தொகுதி ஒதுக்கீடு குறித்த விளக்க உரையாற்றி தீர்மான நகலை வாசித்தார்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் M.சூரியமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் S.இருதயராஜ், மனித உரிமை J.சக்திவேல் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

ஐடி விங் மாவட்ட தலைவர் S.கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் R.அர்ஜுணன், K.M.பாபு, K.முத்து நாராயணன், வட்டார துணைத் தலைவர் K.சீத்தாபதி, மகிளா காங்கிரஸ் கொள்ளார் தமிழரசி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் K.K.சுப்ரமணி, E.ராஜ்குமார், K.கார்த்திகேயன், P.ஏழுமலை, சின்ன நெற்குணம் காத்தவராயன், ராதாகிருஷ்ணன், E.முருகன், D.ராமசாமி, சாகோ, R.கனகராஜ், செல்வராஜ், K.ஐயன், K.ஆறுமுகம், P.குப்பன், P.பொன்னுசாமி, பெரியான், பெருமாள், A.காளி, A.கமலக்கண்ணன் வல்லம் வட்டாரம் மொடையூர் கோவிந்தராஜுலு, விஸ்வநாதன், பூங்காவனம், மாரி, ராமு, காணை வட்டாரம் முன்னாள் ராணுவ வீரர் துரைசாமி, கண்ணன், பிரபு, மணிமாறன், உள்பட மேலும் பல நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் குருசாமி நன்றி கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழா

0

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி
முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய கழகம்
சார்பில்
புரட்சித்தலைவி
அம்மா 78 .வது பிறந்தநாள் விழா
முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்
S.கருப்புசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது
முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் முத்துசாமி

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள்
வளநாடு முருகானந்தம்,ஆதம் கொத்தங்குடி கதிரேசன்*

மாவட்ட பொறுப்பாளர்கள் மோகினி ராஜா,திருவீதி முனியசாமி

முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் ஏ.வேல்முருகன்

முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வே.தமிழ் செல்வன்
இணை செயலாளர் தாமரைக்கனி

மற்றும் கிளைச் செயலாளர்கள் நசுருதீன்,தக்ஷிணாமூர்த்தி ஆலங்கொத்தங்குடி முருகேசன்,மரகதவேல் மற்றும் பொதுமக்கள் சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் முடிவில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

துணை ஆசிரியர் விழுப்புரம் ஜோதி லிங்கம்

அதிமுக தேர்தல் வாக்குறுதிகள்

0

24.02.2026 இன்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி

வாக்குறுதி அறிவிப்புகள்

அதிமுக ஆட்சி அமைந்ததும்உடனடியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணை தொகையாக 10.000 ரூபாய் வழங்கப்படும்,

வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும்

+2 வகுப்பு வரை படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ,அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1000. ரூபாய் வழங்கப்படும்

மீன்பிடி மீனவர்களுக்கு தடை காலங்களில் வழங்கும் ரூ.8,000-நிவாரணத் தொகையை ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்

கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்

நடை பாதை வியாபாரிகள் பெற்ற கூட்டுறவு சங்க வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்

மேற்கண்ட அனைத்து வாக்குறுதிகளும் தமிழ்நாட்டின் வருவாயை பெருக்கி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என புதிய தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம் எல் ஏ

0

சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ!!

ராமநாதபுரம் அருகில் உள்ள கீழக்கரை நகராட்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்களை காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வழங்கினார்,
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகளை ராமநாதபுரம் எம்எல்ஏவும் திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நகராட்சி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.முன்னதாக கீழக்கரை புதிய பேருந்து நிலையம் அருகிலும்,முகம்மது காசிம் அப்பா தர்ஹா பகுதிகளிலும்,வடக்கு தெரு கொந்த கருணை அப்பா தர்ஹா பகுதியிலும் சுமார் 15 ஆயிரம் பேர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கி பேசியதாவது:- எல்லா வகையிலும் தமிழ்நாடு தான் முதலீடமாக இருக்கிறது.தமிழ்நாட்டில் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மகத்தான திட்டங்களை அறிவித்தார்.தமிழ்நாட்டில் 2.50லட்சம் பெண்கள் இருக்கிறார்கள்.மேலும் பேருந்தில் பயணம் செய்ய முடியுமா?இந்த திட்டம் அனைத்து மக்களுக்கு அமுல் படுத்துவது சாத்தியமா என்று சட்டமன்றத்தில் கேள்வி கேட்டார்கள்! அப்போது தமிழக முதலமைச்சர் சொன்னார் 2 கோடியே 50 லட்சம் பெண்கள் பயணிப்பதற்காகத்தான் மகளிருக்காக விடியலை ஏற்ப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் விடியல் பயணம்.பட்டி தொட்டியில் உள்ள பெண்கள் எல்லாம் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.இதனை அடுத்து பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டும் முத்தமிழ் அறிஞர்கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டும் மகளிருக்கு ரூ .1000, மகளிர் உதவித் தொகை வழங்கினார்.இந்தியாவிலேயே அதிகம் பெண்கள் வேலைக்கு போகும் மாநிலம் தமிழ்நாடு தான் மேலும் இஸ்லாமிய மக்கள் மத்தியில் பேசும் பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் மோதினார்,பள்ளிவாசலின் ஆலிம் பெருமக்கள்,இவர்களுக்கு இரு சக்கர வாகன வழங்குவதற்கு ரூபாய் 25 ஆயிரம்மானியம் வழங்கியதோடு,தமிழகத்திலிருந்து ஹஜ்ஜுக்கு செல்ல யாத்திரிகர்கள் சென்னை வந்து அங்கிருந்துதான் ஹஜ் செய்வதற்கு செல்ல வேண்டும்.இப்படி வருகின்ற இஸ்லாமிய யாத்திரிகர்கள் பல்வேறு இடங்களில் தங்குகிறார்கள்.இதற்காக தமிழக முதல்வர் ஹஜ் பயணிகளுக்காக விமான நிலையம் அருகிலேயே ஒரு தங்க விடுதியை கட்டிக் கொடுத்துள்ளார்கள். இதனை அடுத்து நேற்று முன்தினம் மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 1000, ஐ,வருகின்ற போது மூன்று மாதங்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ. 3000/=ஒரே தவணையில் வழங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார்.அன்புடன் சேர்த்து கோடைகால சிறப்பு தொகையாக ரூ. 2000/=சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தால் எதிர்க்கட்சியினர் கோர்ட்டுக்கு சென்று இந்த திட்டத்தை நிறுத்தி விட வாய்ப்பு உள்ளது.கோடை காலம் மற்றும் தேர்தல் காலத்தில் ஏழைகள் கஷ்டப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் முதலமைச்சர் இந்த முடிவை எடுத்துள்ளார்.தற்போது மொத்தம் 5000 பெண்களின் வங்கிகணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக முழுவதும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடக்கத்தில் ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது.தற்போது மேல் முறையீடு செய்தவர்களையும் சேர்த்து ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.மாலை நேரமாக இருந்தாலும் பொதுமக்களும் இஸ்லாமிய பெருமக்களும் அந்தந்த பகுதிக்கு வருகை தந்து நலத்திட்ட உதவிகளை வாங்கிச் சென்றார்கள். இந்த அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்,நகர் செயலாளர் பஷீர்,தலைமையற்றார். நகர்மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா,துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான்,உள்ளிட்ட கவுன்சிலர் மீரான் அலி,உள்ளிட்ட நகர்மன்ற கவுன்சிலர்கள்,அனைத்து ஜமாஅத்தார்கள், திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.கீழக்கரைகாவல்துறையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி

பிளஸ்-2 மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ‘EPS’ உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

0

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது..!

சென்னை | பிப். 14:
வடசென்னை மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) சார்பில், பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்குத் தயாராகும் மாணவ-மாணவியரின் எதிர்கால நலன் கருதி, ‘EPS – Explore, Plan, Succeed’ என்ற பிரம்மாண்ட தொழிற்கல்வி வழிகாட்டுதல் முகாம் இன்று நடைபெற்றது.

ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி, 39-வது வட்டத்திற்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்த முகாம் நடைபெற்றது. வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். சென்னை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பி. வினோத்குமார் முன்னிலை வகித்து, முகாமினைத் தொடங்கி வைத்தார்.

முகாமில் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ்
மாணவர்களுடன் கலந்துரையாடிய பேசிய போது:-

“மாணவர்களே, பிளஸ்-2 என்பது வெறும் பள்ளிப் படிப்பின் முடிவு அல்ல; அது உங்கள் வாழ்வின் மிக முக்கியமான தொடக்கப் புள்ளி. இன்றைய காலகட்டத்தில் எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்பதில் உங்களுக்கு இருக்கும் குழப்பங்களைப் போக்கவே அதிமுக ஐடி விங் இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளது.
வெறும் பட்டப்படிப்போடு நின்றுவிடாமல், உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தையில் தற்போது முன்னிலையில் இருக்கும் நவீன தொழில்நுட்பப் படிப்புகளில் (Emerging Courses) கவனம் செலுத்துங்கள். தமிழகத்தின் எதிர்காலத் தூண்களாகிய நீங்கள், சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தால் தான் ‘தமிழகத்தை மீட்போம்’ என்ற நமது இலக்கு முழுமையடையும். உங்கள் கனவுகள் நனவாக அதிமுக எப்போதும் ஒரு ஏணியாகத் துணை நிற்கும்.”
மேலும், கடந்த பத்தாண்டுகளாக அண்ணா தி.மு.க ஆட்சியில் மாணவர்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட மகத்தான திட்டங்களை நினைவு கூர்ந்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் அதிமுக மகத்தான வெற்றி பெற்று, ஆர்.கே.நகர் தொகுதியில் பட்டப்படிப்பு முடித்த அனைவருக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்” என உறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளைச் சார்ந்த கல்வி வல்லுநர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக:
பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் முறைகள்.
தற்போதைய சந்தை நிலவரம் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள்.
வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பப் படிப்புகள் (Emerging Courses) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
முகாமில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு, கழகத்தின் கொள்கை முழக்கமான “மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நேதாஜி கணேசன், எம்.ஏ.சேவியர், சந்தனசிவா, லட்சுமி, ஏ.கணேசன், டி.டி.ஜனார்த்தனன், பி.ஜெகன், நாகரத்தினம் ரவிராஜன், முகேஷ், கே.பி.கர்ணன், ஆர்.சிவகுமார், கே.எஸ்.மூர்த்தி, மாலா, நிர்மல்குமார், இளவரசன், டி.பிரபாகரன், பிரியா அருள், கல்பனா உள்ளிட்ட பகுதி, வட்ட மற்றும் பல்வேறு அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிலத்தை அளக்க ரூ.50,000 லஞ்சம்: அளவை ஆய்வாளா் கைது

0

நிலத்தை அளக்க ரூ.50,000 லஞ்சம்: அளவை ஆய்வாளா்காஞ்சிபுரத்தில் நிலத்தை அளக்க ரூ.50,000 லஞ்சம் வாங்கியதாக பரந்தூா் விமான நிலையப் பிரிவு நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலுவை ஊழல் தடுப்பு காணிகாணிப்பு போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் குள்ளப்பன் தெருவைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாா். இவா் தனக்கு சொந்தமான நிலம் 64 சென்ட் பரந்தூா் விமான நிலையத்துக்கு வழங்க முடிவு செய்து அதற்கான விருப்ப மனுவினை அளித்தாா். அதனை சரிபாா்க்கும் குழுவில் இடம் பெற்றிருந்த காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியை சோ்ந்த நில அளவை ஆய்வாளா் சுந்தரவடிவேலு (41) ரூ.1 லட்சம் லஞ்சமாக கேட்டுள்ளாா்.

இத்தொகையை தர விரும்பாத ரஞ்சித் குமாா் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி கலைச்செல்வனிடம் புகாா் செய்தாா்.

இந்த நிலையில் ரஞ்சித் குமாரை காஞ்சிபுரம் செங்கழுநீரோடை தெருவுக்கு வருமாறு கூறிய சுந்தர வடிவேலு அங்கு முதல்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றாா்.

அப்போது மறைந்திருந்த ஆய்வாளா் கீதா தலைமையிலான காவல் துறையினா் சுந்தரவடிவேலுவை கைது செய்து அவரிடமிருந்த ரூ.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனா்.

பரந்தூா் விமான நிலையத்துக்கான சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் சுந்தரமூா்த்தி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு சுந்தரவடிவேலு சிறையில் அடைக்கப்பட்டாா்.