Friday, July 17, 2026
Home செய்திகள் மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்: உங்கள் சம்பளத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்...

மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்: உங்கள் சம்பளத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன

0
129
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள் இன்று முதல் அமல்: 

சென்னை:

இந்தியாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்கள் (New Labor Codes) இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி (PF) மற்றும் பணிக்கொடை (Gratuity) போன்ற பணப்பயன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

ஏன் இந்த மாற்றம்? சுதந்திரத்திற்கு முன்பும் பின்பும் உருவாக்கப்பட்ட சுமார் 29 பழைய தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து, காலத்திற்கு ஏற்றவாறு 4 முக்கிய சட்டங்களாக மத்திய அரசு மாற்றியுள்ளது. ஊதியச் சட்ட விதி, சமூகப் பாதுகாப்பு விதி உள்ளிட்ட இந்த 4 புதிய விதிகள் இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றன.

சம்பளக் கணக்கீட்டில் மாற்றம்:

புதிய விதிகளின்படி, ஒரு தொழிலாளியின் அடிப்படை ஊதியம் (Basic Pay) என்பது அவரது மொத்த சம்பளத்தில் (CTC) 50 சதவீதமாக இருக்க வேண்டும். நிறுவனங்கள் அடிப்படை ஊதியத்தை உயர்த்தும்போது, அதற்கேற்ப பிஎஃப் (PF) பங்களிப்பும் அதிகரிக்கும். இது தொழிலாளர்களின் ஓய்வுகால நிதியை பெருக்க உதவும்.

முக்கிய மாற்றங்கள் ஒரு பார்வையில்:

  • பணிக்கொடை (Gratuity): இனி பணிக்கொடை பெறுவதற்கு 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு வருடம் பணிபுரிந்தாலே பணிக்கொடை பெற தகுதி உண்டு.

  • மருத்துவப் பரிசோதனை: 40 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனையை நிறுவனங்கள் கட்டாயமாக வழங்க வேண்டும்.

  • ஓய்வூதியப் பலன்கள்: பிஎஃப் பங்களிப்பு உயர்வதால், ஓய்வு பெறும்போது கிடைக்கும் மொத்தத் தொகை மற்றும் பென்ஷன் கணிசமாக உயரும்.

 

இருப்பினும், பிஎஃப் பிடித்தம் அதிகரிப்பதால், ஊழியர்கள் மாதந்தோறும் கையில் வாங்கும் நிகரச் சம்பளம் (Take-home salary) சற்று குறையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here