Home உலகம் அமெரிக்காவின் போர் நிறுத்த தூது நிராகரிப்பு! ஈரான் – அமெரிக்கா போரில் உச்சகட்ட பதற்றம்: டிரம்ப்...

அமெரிக்காவின் போர் நிறுத்த தூது நிராகரிப்பு! ஈரான் – அமெரிக்கா போரில் உச்சகட்ட பதற்றம்: டிரம்ப் பின்னடைவா?

0

அமெரிக்காவின் போர் நிறுத்த தூது நிராகரிப்பு! ஈரான்

தெஹ்ரான்:

மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த ஒரு மாதமாக நீடித்து வரும் ஈரான் – அமெரிக்கா இடையிலான நேரடிப் போர், தற்போது கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளது. அமெரிக்கா முன்வைத்த தற்காலிக போர் நிறுத்தக் கோரிக்கையை ஈரான் அதிரடியாக நிராகரித்துள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி என்ன? அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை “கற்காலத்திற்குத் தள்ளுவோம்” என எச்சரித்து தாக்குதல்களைத் தீவிரப்படுத்தினார். இதற்குப் பதிலடியாக ஈரான் தனது ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் வளைகுடா பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது. நேற்று அமெரிக்கா ஈரானின் முக்கியப் பாலம் ஒன்றைத் தகர்த்த நிலையில், பதிலுக்கு எட்டு பாலங்களை அழிப்போம் என ஈரான் சூளுரைத்துள்ளது.

அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது:

ஈரான் வான்பரப்பில் ஊடுருவிய அமெரிக்காவின் அதிநவீன போர் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்துள்ளது. அதில் இருந்த விமானியைத் தேடும் பணியில் இரு நாடுகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த மோதலில் இதுவரை ஈரானில் 3,500 பேரும், அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தரப்பில் கணிசமான வீரர்களும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிராகரிக்கப்பட்ட போர் நிறுத்தம்:

நிலைமை மோசமடைவதைக் கண்ட அமெரிக்கா, ஒரு மூன்றாம் நாடு வழியாக 48 மணி நேர போர் நிறுத்த முன்மொழிவை ஈரானிடம் வழங்கியது. ஆனால், “அமெரிக்காவின் எந்த சமரசத்திற்கும் இடமில்லை” எனக் கூறி ஈரான் அதை நிராகரித்துவிட்டது. இரண்டு வாரங்களில் ஈரானை வீழ்த்துவோம் எனக் கூறிய டிரம்பிற்கு, ஈரானின் இந்த பிடிவாதம் மிகப்பெரிய ராஜதந்திர பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது வரை இந்த போர் நிறுத்த விவகாரம் குறித்து அமெரிக்க தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ விளக்கங்கள் எதுவும் வெளியாகவில்லை. இருப்பினும், வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் கருகூடியுள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version