Monday, July 13, 2026
Home Blog Page 37

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி குடியரசு தின விழா

0

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.செல்வபெருந்தகை MLA.,
தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் M.K.விஷ்ணு பிரசாத் MP.,அறிவுறுத்தலின்படி

விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வழக்கறிஞர் R.R.ரமேஷ் வழிகாட்டுதல்படி

26-1-2026 திங்கள் காலை 9.00 மணியளவில் கூட்டேரிப்பட்டு 4 – முனை சந்திப்பில்

மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாட்டின்
77 -வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் இல.கண்ணன் தலைமை ஏற்று இந்தியா ஜனநாயக நாடாக மலர்ந்திட காங்கிரஸ் பேரியக்கமும் அதன் தலைவர்களும் அரும்பாடு பட்ட வரலாற்று உரையை நிகழ்த்தினார்

மாவட்ட துணைத் தலைவர் S.இருதயராஜ், மாவட்ட செயலாளர் R.அர்ச்சுணன், ஐடி விங் மாவட்ட தலைவர் S.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மயிலம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் மெடிக்கல் M.செல்வம் தேசியக்கொடி ஏற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் வட்டார துணைத் தலைவர் K.சீத்தாபதி, வட்டார பொருளாளர் S.பலராமன், எஸ்.சி துறை வட்டார தலைவர் S.கலிவரதன், P.பொன்னுசாமி, P.தீர்த்தமலை, B.நரசிம்மன், D.தண்டபாணி, E.கருணாநிதி, G.அன்பழகன், காத்தவராயன், ஐடி விங் மாவட்ட செயலாளர்கள் K.கார்த்திகேயன், E.ராஜ்குமார், K.லட்சுமணன், H.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரம் சக்தி யோகா அறிமுக வகுப்பு நடைபெற்றது

0

ராமநாதபுரம் மாவட்டம்,ராமநாதபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பரம் சக்தி யோகா அறிமுக வகுப்பு இன்று காலை நடைபெற்றது.
பாரதத்தின் பழம்பெறும் கலையான தியானம் யோகா மற்றும் பிராணயமும் மூலம் பண்டைய வாழ்வியல் முறைக்கு திரும்புதல் மூலம் ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம்மிட பரம் சக்தி யோகா என்னும் கலையை 35 ஆண்டுகால அனுபவமிக்க அருட் திரு வி.எஸ்.சேகர் ஜெயந்தன் அறிமுக உரையாற்றினார்.
அமைதி,சுகம் ஆனந்தம் மகிழ்ச்சி அன்பு கருணை செல்வம் இன்பம் அனைத்தும் நிரந்தரமாக கிடைத்திட பரம் சக்தியோகம் பற்றி அருட்திரு வி.எஸ் சேகர் ஜெயந்தன் உரையாற்றினார். இதில் முன்னதாக குத்துவிளக்கேற்றி வைத்தனர்.முதுகுளத்தூர் செல்வி மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் ராம்குமார்,தமிழ்ச்செல்வி உதயகுமார்,ஜி.எம், பைனான்ஸ் மாரிமுத்து,ராமநாதபுரம் மணி ரியல்ஸ் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பரம் சக்தி யோகா என். மகேஸ்வரன் நன்றி உரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கல்லூரியில் பெண்கள் மீது வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

0

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ADECOM நெட்வொர்க் – பெண்கள் வள மையம், கள்ளக்குறிச்சி சார்பில் 16 நாட்கள் பெண்கள் மீது வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட திருக்கோவிலூர் துணை ஆட்சியர் திரு. ஆனந்த் குமார் சிங், ஐ.ஏ.எஸ்., இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் “ஆன்லைன் செக்ஸ் டோர்ஷன்” குறித்துப் பேசினார். சமூக வலைதளங்கள் மூலம் முதலில் நட்பு ஏற்படுத்தி, பின்னர் தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பெற்று அதனை மிரட்டலுக்குப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வகை குற்றங்கள், குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் மாணவிகளின் மனநலத்தை கடுமையாக பாதிப்பதாகவும், பயம் மற்றும் அவமானம் காரணமாக பலர் மௌனமாக இருப்பது கவலைக்குரியது என்றும் அவர் கூறினார். ஆன்லைனில் அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், செக்ஸ் டோர்ஷன் போன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் பயப்படாமல் உடனடியாக காவல் துறை, பெண்கள் காவல் நிலையம் அல்லது பெண்கள் வள மையங்களை அணுக வேண்டும் என்றும், புகார் அளிப்பதன் மூலம் மட்டுமே குற்றவாளிகளை தடுக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார் ரெட்யூஸ் தமிழ் செய்திக்காக திருக்கோவிலூர் செய்தியாளர் முத்துக்குமரன்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே த.வெ.க சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

0

கலவை அருகே பழங்குடியின மக்களுக்கு தவெக சார்பில் மாட்டுப் பொங்கல் திருவிழா முன்னிட்டு வேட்டி, சேலைளுடன் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மேல்நேல்லி கிராம பழங்குடியின பகுதியில் மாட்டுப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் திமிரி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா திமிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் மேல்நெல்லி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகன் கலந்துக் கொண்டு வேட்டி, சேலைகள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பினை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தார்.

இதில் பேசிய விஜய் மோகன், மக்களுக்காக சேவை செய்யக்கூடிய ஒரே கட்சியாக தமிழக வெற்றி கழகம் உள்ளது அதற்கு சான்றாகத்தான் தற்பொழுது பழங்குடியின மக்களுடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடி வருகிறோம். வருகின்ற 2026 தேர்தலில் தீய சக்தியான திமுகாவை வீழ்த்த வேண்டும் அதற்க்கு நீங்கள் எல்லாம் தமிழக வெற்றி கழகத்துக்கு வாக்குகள் போட்டு தளபதி விஜய் முதல்வராக அமர வைக்க வேண்டும் என பேசினார்.

முன்னதாக மாவட்ட செயலாளரை வரவேற்கும் விதமாக மேளதாளம் முழங்க விவசாயிகளின் அடையாளமான மாட்டு வண்டியில் மூலம் அழைத்து வரப்பட்ட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் சுரேஷ், ஒன்றிய இணை செயலாளர் வெங்கடேசன், கிளை செயலாளர்கள் தினேஷ், பாண்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.ரெட் நியூஸ் தமிழ் செய்திக்காக ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் சிவா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ரெட் நியூஸ் தமிழ் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்

சோளிங்கரில் திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகள்

0

தமிழக முதல்வர் தமிழக முழுவதும் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட்டு களில் இளைஞர்கள் அதிகம் ஆர்வம் பெற்று மாவட்ட மாநில தேசிய அளவில் தமிழக விளையாட்டு இளைஞர்கள் பங்கு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழகம் முழுவதும் திராவிட பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகிறார்கள்

இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மேல்நிலைப்பள்ளியில்

தமிழக திராவிட பொங்கல் விளையாட்டு போட்டி நடைபெற்றது

இந்தப் போட்டியில் எட்டு அணிகள் கொண்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்

போட்டியில் வென்ற முதல் பரிசு வீரர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும்
இரண்டாம் பரிசு வென்ற வீரர்களுக்கு 30 ஆயிரம் ரூபாயும்

மூன்றாம் பரிசு வென்ற வீரர்களுக்கு இருபதாயிரம் ரூபாயும் பரிசாக

ராணிப்பேட்டை மாவட்ட கைத்தறி துணி நூல் அமைச்சர் காந்தி

மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் வினோத் காந்தி

ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டில் வெற்றி பெற்ற வேர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்

உடன் தலைமை கழக செயற்குழு உறுப்பினர் அசோகன்

மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம்

திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வம்

திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி

திமுக நகர செயலாளர் கோபி

நகர மன்ற துணைத் தலைவர் வேண்டாம் பழனி

நகர மன்ற உறுப்பினர்கள் அன்பரசு
அருண் ஆதி சரத்குமார் வெங்கடேசன்
காமேஷ் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது கம்யூனிஸ்ட் கட்சியினர் நடவடிக்கை எடுத்தது

0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றிi உளுந்தூர்பேட்டை வட்டம் புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் செந்தமிழ்ச்செல்வன் ரஞ்சித்குமார் ராகவன் கதிரவன் பிச்சக்காரன் சிவக்குமார் ஜெயச்சந்திரன் மணிகண்டன் எல்லை கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோரை எலவனாசூர்கோட்டையை சேர்ந்த ஆனந்த் என்பவர் துபாய் நாட்டில் Ware House packing Company யில் மாதச் சம்பளம் 1500 திராம்ஸ் (ரூ. 36000) கொடுப்பதாக கூறி கடந்த நவம்பர்15.16 2025 அன்று அனுப்பி குறிப்பிட்டது போல் அவர்களுக்கு வேலை வழங்காமல் அஜ்மன் நகரில் ஒரு அறையில் அனைவரும் தங்க வைக்கப்பட்டு அங்கிருந்த நவாப் என்பவர் அனைவரது பாஸ்போர்ட்டையும் புடுங்கி வைத்துக் கொண்டார். வேலை இன்றி கையில் வைத்திருந்த பணத்தை உணவுக்கு செலவு செய்து பணமின்றி பட்டினி கிடந்தனர். இப்படியே 20 நாட்கள் கடந்தனர். துபாயில் பசி பட்டினியால் வாடிய பெற்றோர்கள் மனைவிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதவியை நாடியபோது 6-12-2025 அன்று மாவட்ட ஆட்சியரையும். உளுந்தூர்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களையும் மனு கொடுத்து பேசியவுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவரும் சொந்த ஊர் திரும்பினார்கள்.

ஏர் டிராவல்ஸ் உரிமையாளர் ஆனந்த் மீது புகார் கொடுத்து ஒவ்வொரு நபரும் கொடுக்கப்பட்ட தலா ரூ. 110000 த்தில் துபாய்க்கு அனுப்பிய செலவு தொகை போக மீதி ஒவ்வொரு நபருக்கும் 70000 கொடுப்பதாக உறுதியளித்து இதில் பாதித்தொகை தலா ரூ. 35000 இன்று பெற்றுத் தரப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்கள் பாராட்டி வாழ்த்தி சென்றார்கள். தோழமையுடன் வி.ரகுராமன் ஒன்றிய செயலாளர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உளுந்தூர்பேட்டை மேற்கு

செங்கம் அருகே பயங்கரம்: விவசாய நிலத்தில் தம்பதி தங்கியிருந்த குடிசைக்கு தீ வைப்பு – இருவரும் உடல் கருகி உயிரிழப்பு

0

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பக்கிரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (50). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சர்தார் என்பவருக்குச் சொந்தமான, ஏரிக்கரை ஓரம் உள்ள சுமார் மூன்று ஏக்கர் விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்.

​. கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரிந்த நிலையில் தமிழரசி தனது பிள்ளைகளுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.

​இந்த நிலையில் சக்திவேல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தாண்ட பட்டு பகுதியைச் சேர்ந்த அமிர்தம் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில்

​நேற்று இரவு சக்திவேல் மற்றும் அமிர்தம் ஆகிய இருவரும் குடிசையில் தூங்கிக் கொண்டு இருந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள், தப்பிக்க முடியாதவாறு வெளிப்பக்கமாகப் கதவை பூட்டிவிட்டு, தீ வைத்துள்ளனர்.

​தீ மளமளவெனப் பரவியதில், வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட சக்திவேல் மற்றும் அமிர்தம் ஆகிய இருவரும் வெளியே வர முடியாமல் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த செங்கம் காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் குப்பன்

பல்லடத்தில் திமுக மகளிர் மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்றது

0

பல்லடத்தில் சிறப்பாக நடைபெற்ற மகளிர் மாநில மாநாடு இந்த நிகழ்வு மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி அளவில் முடிவடைந்தது தமிழக எம்பி கனிமொழி தலைமையில், முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் சிறப்புரையாற்றினார் இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் .செந்தில் பாலாஜி கே.என்.நேரு ,மூ.போ.சாமிநாதன் மற்றும் பல முக்கிய அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், எம்பிக்களும் ,கட்சியினரும், மேயர்களும் ,உள்ளாட்சி ஊராட்சி தலைவர்களும், தொண்டர்களும் ,கிளை அணி மகளிர் அணி. மாணவர் அணி ,அனைத்து பொதுமக்களும் ,கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது மேலும் 30 ஏக்கர் நிலத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேடை அமைக்கப்பட்டது இதில் பெண்களுக்கு தனியா குழந்தைகள் பாலூட்டும் அறை, நாப்கின் வழங்கும் அறை ,கழிவறை, மற்றும் உணவு , ஸ்நாக்ஸ் , குடிநீர் வசதி, போன்றவைகள் வழங்கப்பட்டது பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தும் வசதி வசதி செய்யப்பட்டு மூவாயிரத்துக்கு மேற்பட்ட காவல்துறையினரின் கண்காணிப்பில் இத்திட்டம் சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க .ஸ்டாலின் பெண்களுக்கான சிறப்பு திட்டங்களை அறிவித்தார், பல்லடம் தாலுகா செய்திக்காக .. எஸ்.வசந்தகுமார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்

0

இனளஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு
ராமநாதபுரம் மாவட்டம் திமுக மாவட்ட செயலாளர்.சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.இதில் முதலாவதாக திருப்புல்லாணி ஊராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுச் சென்றனர்.இதில் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்க பேசும் பொழுது தான் சட்டமன்ற உறுப்பினராக இந்தப் பகுதியில் தேர்வு செய்த பின் ஒவ்வொரு கிராம மக்களின் கோரிக்கைகளை ஏற்று பல்வேறு தரப்பினரும் சொன்னதை ஏற்று எனது பணிகளை செய்தேன்.மேலும் தமிழக முதல்வர் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.என்று அவர் பேசினார்.முதலாவதாக திருப்புல்லாணி சேதுக்கரை, கோரை கூட்டம், பஞ்சஞ் தாங்கி, தாதனேந்தல் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தந்த சட்டமன்ற உறுப்பினருக்கு காங்கிரஸ் கட்சி திருப்புல்லாணி வட்டாரத் தலைவர் சேதுபாண்டி
சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் சமூக சேவா சங்கம் நடத்தும்போது மருத்துவ முகாம் நடைபெற்றது

0

ராமநாதபுரம் மாவட்டம்,
தேவிபட்டினத்தில் சமூக சேவா சங்கம் (ம) வேலு மாணிக்கம் கதிரேசன் ஹெல்த் மற்றும் எஜிகேஷன் டிரஸ்ட் இணைந்து இன்று மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.இம்முகாமில் சர்க்கரை நோய்,பாத சிகிச்சை,பொது மருத்துவம்,கண் மருத்துவம்,குழந்தைகள் மருத்துவம், உள்ளிட்ட பல் மருத்துவம் (ம) பெண்கள் (பொது மருத்துவம் பிற நோய்களுக்கு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.இதில் ஆண்களும் பெண்களும் 250 பேர்களுக்கு மேல் சிகிச்சை பெற்று சென்றார்கள்.தேவிபட்டினம் (ம) சுற்று வட்டார கிராம மக்கள் வழி நடந்தனர்.இந்த முகாமில் சர்க்கரை (ம) பாத சிகிச்சை நிபுணர்
மரு.ராஜீவ், (வேலு மாணிக்கம் கிளினிக்),குழந்தை கள் மருத்துவமனை டாக்டர் பாபு, JJ கிளினிக் டாக்டர் கிருத்திகா,எம்எஸ் டென்டல் கேர், மரு.ரபி, ஷிபியா,மிலன் டென்டல் கிளினிக் டாக்டர் நிஷா, ஆப்டிகல் பேலஸ் சஜன்,உள்ளிட்ட பொது மருத்துவம் சர்க்கரை (ம)பாதம்,பெண்கள் குழந்தைகள்,பல்,சிகிச்சை உள்ளிட்ட உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி