Home செய்திகள் திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனுத் தாக்கல்! புஸ்சி ஆனந்த் கொடுத்த பேனாவால் கையெழுத்திட்ட ‘தவெக’ தலைவர்...

திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனுத் தாக்கல்! புஸ்சி ஆனந்த் கொடுத்த பேனாவால் கையெழுத்திட்ட ‘தவெக’ தலைவர் – பின்னணி என்ன?

0

திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனுத் தாக்கல்

திருச்சி:

தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் விஜய், இன்று திருச்சி கிழக்குத் தொகுதிக்கான தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று இரண்டாவது தொகுதியாகத் திருச்சியில் களம் இறங்கியுள்ளார்.

தனி விமானத்தில் வந்திறங்கிய விஜய்:

இன்று காலை சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த விஜய்க்கு, விமான நிலையத்திலேயே தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து பிரச்சார வாகனம் மூலம் பாலக்கரை நோக்கிச் சென்ற விஜய்க்கு, வழிநெடுகிலும் ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்ததால் அது ஒரு பிரம்மாண்டமான ‘ரோடு ஷோ’ (Roadshow) போல மாறியது

வேட்புமனுத் தாக்கலும், அந்தப் பேனாவும்:

பாலக்கரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேசபாண்டியனிடம் விஜய் தனது மனுவைச் சமர்ப்பித்தார். இந்த நிகழ்வின் போது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. கையெழுத்திடுவதற்காகத் தேர்தல் அதிகாரிகள் பேனா வழங்கிய போதிலும், விஜய் தனது கட்சியின் முக்கிய நிர்வாகியான  புஸ்சிஆனந்த் அளித்த பேனாவைக் கொண்டே ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

51 நிபந்தனைகளுடன் பிரச்சாரம்:

மனுத் தாக்கலை முடித்த கையோடு, திருச்சி காந்தி மார்க்கெட் மற்றும் மரக்கடை பகுதிகளில் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். முன்னதாகப் பாதுகாப்பு காரணங்களுக்காகச் சென்னையில் சில பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், திருச்சியில் விஜய்யின் பிரச்சாரத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் இந்தப் பிரச்சாரத்திற்கு 51 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜை எதிர்த்து விஜய் களம் காண்பதால், இந்தத் தொகுதி தற்போது விஐபி அந்தஸ்தைப் பெற்றுள்ளது

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version