Home செய்திகள் ₹20,000 லஞ்சம் வாங்கியதாக இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் காவல் நிலையத்திலேயே அதிரடி கைது!

₹20,000 லஞ்சம் வாங்கியதாக இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் காவல் நிலையத்திலேயே அதிரடி கைது!

0
₹20,000 லஞ்சம் வாங்கியதாக இரண்டு பெண் உதவி ஆய்வாளர்கள் காவல் நிலையத்திலேயே அதிரடி கைது!

 

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் (SI) பாக்கியலட்சுமி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) அமூல் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகளை, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜெயக்குமார் இன்று காவல் நிலையத்திலேயே வைத்து அதிரடியாகக் கைது செய்தார்.

வழக்கின் பின்னணி: திருமுல்லைவாயல், சிடிஎச் (CTH) சாலையில் அமைந்துள்ள அழகு நிலையம் மற்றும் ஸ்பா (spa) ஒன்றின் பெண் உரிமையாளரிடம், மாதந்தோறும் ₹50,000 லஞ்சம் தருமாறு இவர்கள் கேட்டுள்ளனர். இந்த நிலையில், அதன் முதல் தவணையாக ₹20,000-ஐ அவர்கள் அந்தப் பெண் உரிமையாளரிடம் இருந்து வாங்கிக்கொண்டிருந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாகப் பிடித்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version