Home செய்திகள் ஆட்சியில் பங்கு, அமைச்சரவையில் சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம்: முதலமைச்சர் விஜய்க்கு முனைவர் ச.சு. ஜைனுதீன் நெஞ்சார்ந்த வாழ்த்து!

ஆட்சியில் பங்கு, அமைச்சரவையில் சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம்: முதலமைச்சர் விஜய்க்கு முனைவர் ச.சு. ஜைனுதீன் நெஞ்சார்ந்த வாழ்த்து!

0
ஆட்சியில் பங்கு, அமைச்சரவையில் சிறுபான்மையினருக்குப் பிரதிநிதித்துவம்: முதலமைச்சர் விஜய்க்கு முனைவர் ச.சு. ஜைனுதீன் நெஞ்சார்ந்த வாழ்த்து!

 

விழுப்புரம் / சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய அலையை உருவாக்கி, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் சமூகப் போராளி முனைவர் ச.சு. ஜைனுதீன் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

திரையுலக உச்சம் முதல் வி.சாலை மாநாடு வரை:

தமிழ் திரைப்பட உலகில் உதவி இயக்குநராக இருந்த தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மூலமாக அறிமுகமாகி, பின்னர் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘கில்லி’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘மெர்சல்’, ‘லியோ’ எனப் பல நூறு கோடி வசூல் சாதனைப் படங்களை வழங்கி, இந்தியாவிலேயே ₹250 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக உயர்ந்தவர் விஜய்.

மக்களுக்காக உழைக்கப் போவதாகக் கூறி, தனது கடைசித் திரைப்படம் ‘ஜனநாயகன்’ என்பதைத் தெளிவுபடுத்திய அவர், விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டின் மூலம் முழுநேர அரசியலில் களம் இறங்கினார்.

கூட்டணி தர்மமும் உண்மையான சமூக நீதியும்:

கடந்த 60 ஆண்டுகால தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் தங்களது கட்சி சார்ந்தவர்களுக்கே அமைச்சர் பதவிகளை வழங்கி வந்த நிலையைத் தற்போதைய முதலமைச்சர் விஜய் உடைத்தெறிந்துள்ளார்.

“ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற தனது மாநாட்டுப் பிரகடனத்தின்படி, நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனிப் பெரும்பான்மையுடன் 108 தொகுதிகளில் வென்று இந்தியாவையே ஆச்சரியப்பட வைத்தார். தேர்தல் நேரத்தில் போலியான சமூக நீதி பேசி வந்த திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக, பட்டியல் மற்றும் சிறுபான்மையின சமூக மக்களுக்குத் தனது அமைச்சரவையில் உரியப் பிரதிநிதித்துவத்தை வழங்கி, உண்மையான சமூக நீதியை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் நிலைநாட்டியுள்ளார் என ஜைனுதீன் பாராட்டியுள்ளார்.

அமைச்சரவையில் சிறுபான்மையினருக்குப் பெருமை:

தமிழக அமைச்சரவையில் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த:

  • திரு. முஹமது பர்வேஸ் (தவெக – அறந்தாங்கி தொகுதி)

  • திரு. ஷாஜகான் (ஐயூஎம்எல் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)

ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்தச் சிறுபான்மை மக்களுக்கும் பெருமைக்குரிய விஷயமாகும்.

திராவிடக் கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி:

தேர்தலுக்கு முன்பாக, “விஜய் மீண்டும் சினிமாவுக்குச் சென்றுவிடுவார்” என்று திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் விமர்சித்ததையும், “தற்போது தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது” என இணையத்தில் பரப்பப்படும் வதந்திகளையும் ஜைனுதீன் சாடியுள்ளார். அன்று கர்மவீரர் காமராஜரைத் தோற்கடித்த அதே திராவிடக் கட்சிகள், இன்று செய்வதறியாது திகைத்து நிற்கின்றன. இனியாவது திராவிடக் கட்சிகள் தங்களை மாற்றிக்கொண்டு பட்டியல் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு உரியப் பிரதிநிதித்துவம் வழங்க முன்வர வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

மாநிலத்தில் நிலவும் அமைதியான சூழல் மற்றும் மக்கள் ஆதரவைக் கருத்தில் கொண்டால், மீண்டும் ஒரு தேர்தல் வந்தாலும் தவெக 224 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது. எனவே, முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இந்த 5 ஆண்டுகள் மட்டுமன்றி, வருங்காலங்களிலும் தொடர்ந்து மக்கள் நலன் காக்கும் சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் கழகத்தின் சார்பில் முனைவர் ச.சு. ஜைனுதீன் வாழ்த்தியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version