Thursday, April 16, 2026
Google search engine
Homeசெய்திகள்ராமநாதபுரம் மாவட்டத்தில் கருத்துக் கணிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கருத்துக் கணிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம்.
கீழக்கரை நகராட்சி கட்டிடத்தை ரூ. 4 கோடியே 32 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்க தமிழக அரசின் நிதி ஒதுக்கி உள்ளது கடந்த நகர மன்ற கூட்டத்தில் நகராட்சி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தீர்மானம் வைக்கப்பட்டது. அதற்கு அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.சில கவுன்சிலர்கள் நகராட்சி கட்டிடம் கீழக்கரை நகருக்குள் அமைய வேண்டும் என்றனர் தற்போது இங்கே ஒரு நகராட்சி கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக கீழக்கரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் கருத்து கேட்பு கூட்டம் தனியார் மஹாலில் நடந்தது.இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் (ம)திமுக கவுன்சிலர்கள் அனைத்து சமுதாய கூட்டமைப்பு கவுன்சிலர் ஷேக் உசைன் ஜமாத்தார்கள் (ம) பலர் கலந்து கொண்டனர்.
அப்போது எம்எல்ஏ காதர் பாட்ஷா பேசுகையில் கீழக்கரை நகராட்சி கட்டிடம் குறித்து மீண்டும் ஒருமுறை நகராட்சி கமிஷனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.இதனை அடுத்து நகர் மன்ற துணைத் தலைவர் மற்றும் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட திமுகவினர் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது அப்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கிரவுன் ஹீசைன் என்பவருக்கும் திமுக நகர்மன்ற துணைத் தலைவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
தகவல் அறிந்த கீழக்கரை காவல் ஆய்வாளர் பத்மநாதன் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழைத்து இரு தரப்பு மக்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.கருத்துக்கணிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கியதாக நகர்மன்ற துணைத் தலைவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments