Thursday, April 16, 2026
Google search engine
Homeசெய்திகள்ராமநாதபுரம் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது.
இது சம்பந்தமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்அமுதா ராணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் புற்றுநோய் அறுவை சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர்கள் கணேஷ் பாபு,நித்திய பிரியதர்ஷினி, முனீஸ்வரர் பாண்டியன், சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மூன்று பேருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மார்பக புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது; இனி வரும் காலங்களில் கர்ப்பப்பை புற்றுநோய்,மலக்குடல் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து வகையான புற்று நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும். தற்போது ரேடியேசன் அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது.
ரேடியேசன் பிரிவு அமைத்தவுடன் புற்றுநோய் பரிசோதனை முதல் அறுவை சிகிச்சை வரை ராமநாதபுரம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்ய முடியும். தேவையைப் பொறுத்து புற்றுநோய் பிரிவுக்கென தனி வார்டு அமைக்க திட்டமிட்டுள்ளோம், என்று அவர் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments