Monday, June 1, 2026
Google search engine
Homeசெய்திகள்விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒருதலைப்பட்ச விசாரணை? – முஸ்லிம் மக்கள் கழகத் தலைவர்...

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒருதலைப்பட்ச விசாரணை? – முஸ்லிம் மக்கள் கழகத் தலைவர் ஜைனுதீன் கடும் கண்டனம்!

விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒருதலைப்பட்ச விசாரணை? – முஸ்லிம் மக்கள் கழகத் தலைவர் ஜைனுதீன் கடும் கண்டனம்!

விழுப்புரம்: விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்பப் பிரச்சினை தொடர்பான விசாரணையில், காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும், புகாரளிக்க வரும் ஆண்களைக் கண்ணியக்குறைவாக நடத்துவதாகவும் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மனுப் பெறுவதில் தாமதம்:

விக்கிரவாண்டி தாலுக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர், “தனது மனைவியுடன் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினையைச் பேசித் தீர்த்து, அவரைத் தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்” என்ற கோரிக்கையுடன் கடந்த 22.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மனு அளிக்கச் சென்றுள்ளார்.

முஸ்லிம் மக்கள் கழகத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் தலைமையில், வானூர் தொகுதிச் செயலாளர் க. செல்வம், திண்டிவனம் நகரத் தலைவர் அ. முஹம்மத் சாதிக் மற்றும் புகார்தாரரின் தாயார் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த மனுவைப் பெற காவல்துறையினர் மறுத்ததாகவும், பின்னர் உரியப் பரிந்துரைக்குப் பிறகே மனு ஏற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில் அதிருப்தி – எழும் குற்றச்சாட்டுகள்:

இதனைத் தொடர்ந்து, நேற்று (23.05.2026) இரு தரப்பினரும் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். அப்போது வழக்கறிஞர் ரவிச்சந்திரன் மற்றும் க. செல்வம் ஆகியோருடன் புகார்தாரர் தரப்பு ஆஜரானது.

அங்குப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் (SI) புனித வெள்ளி அவர்கள் நடத்திய விசாரணை தங்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக ஜைனுதீன் குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையின்போது ஆண்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல், பெண்களுக்கு மட்டுமே ஆதரவாக ஒருதலைப்பட்சமாகப் பேசியதாகவும், இரு தரப்பு நியாயங்களையும் முழுமையாகக் கேட்காமல் அதிகாரத் தோரணையில் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களின் மனநிலை பாதிக்கப்படும் வகையில் ஊழியர்கள் நடந்துகொள்வது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை கண்காணிப்பாளருக்குக் கோரிக்கை & போராட்ட எச்சரிக்கை:

இது குறித்துப் பேசிய சமூகப் போராளி முனைவர் ஜைனுதீன்:

“காவல்துறை என்பது பொதுமக்களின் நண்பனாக இருக்க வேண்டுமே தவிர, எதிரியாக அல்ல. சுதந்திரத்திற்குப் பிறகு குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உருவாக்கப்பட்ட துறை, இன்று ஏவல் துறையாக மாறிவிடக் கூடாது. தற்போதைய புதிய அரசு மக்களுக்குப் பல்வேறு நற்பணிகளைச் செய்து வரும் வேளையில், இதுபோன்ற சில அதிகாரிகளின் செயல்பாடுகளால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.”

எனவே, விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) அவர்கள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். காவல் நிலையத்திற்கு வரும் ஆண்கள், பெண்கள் இருவரிடமும் கண்ணியத்துடனும் சமூக நீதியுடனும் காவல்துறையினர் நடந்துகொள்ள அறிவுறுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், மக்கள் நலன் கருதி முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments