Home உலகம் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை: ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற அறிவுறுத்தல்!

அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் விடுத்த பகிரங்க எச்சரிக்கை: ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேற அறிவுறுத்தல்!

0

மத்திய கிழக்கில் பதற்றம்:

மத்திய கிழக்குப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரானில் சமீபகாலமாக அரங்கேறி வரும் தொடர் படுகொலைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அங்குள்ள அமெரிக்க நிறுவனங்களைச் சிதைப்போம் என ஈரான் இராணுவம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

ஈரான் இராணுவம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இனி ஈரானுக்குள் நிகழும் ஒவ்வொரு உயிர் இழப்பிற்கும் ஈடாக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இயங்கி வரும் ஒரு முன்னணி அமெரிக்க நிறுவனம் தரைமட்டமாக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

பாதுகாப்பு அறிவுறுத்தல்:

தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அந்த நிறுவனங்களைச் சுற்றியுள்ள ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக அந்த இடங்களை விட்டு வெளியேறுமாறு ஈரான் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்:

தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தும் Cisco, HP, Intel, Microsoft, Apple, Google, Meta, Tesla, மற்றும் JPMorgan Chase உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஈரானின் இந்த இலக்கு பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிவிப்பால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

🟥RED NEWS TAMIL🟥

01, WEDNESDAY APRIL .2026

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version