Sunday, July 12, 2026
Home Blog Page 44

திருச்சி அருகே பரபரப்பு புகார் கொடுக்க வந்த பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த எஸ்ஐ

0

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீழக்குன்னுப்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார். லாரி டிரைவர். இவரது மனைவி கிருத்திகா(35). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். சிவக்குமார் மற்றும் அவரது பெரியப்பா ஜோதிவேல் வயல்கள் அருகருகே உள்ளது. இருவருக்கும் கிணற்றிலிருந்து வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த ஜூன் 29ம் தேதி கிருத்திகா கிணற்றில் இருந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சியபோது அங்கு வந்த ஜோதிவேல், அவரிடம் வாக்குவாதம் செய்து தாக்கினார். இதில் காயமடைந்த கிருத்திகா, துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக அவர் துறையூர் போலீசில் புகார் அளித்தார். அதேசமயம் ஜோதிவேல், சிவக்குமார் தம்பதி மீது துறையூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணைக்கு வருமாறு துறையூர் எஸ்ஐ சஞ்சீவி, கிருத்திகாவை காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற கிருத்திகாவிடம், உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ எனது ஆசைக்கிணங்க வேண்டும். இல்லை என்றால் உன் மனுவை விசாரிக்காமல் அலைக்கழிப்பேன் என காவல் நிலையத்திலேயே எஸ்ஐ கூறியதாக தெரிகிறது.

இதில் அதிர்ச்சியடைந்த கிருத்திகா, அங்கிருந்து அழுதபடியே வீட்டிற்கு வந்துள்ளார். வெளி மாநிலத்தில் லாரி ஓட்டி கொண்டிருந்த கணவரிடம் இது பற்றி செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி கிருத்திகா, எஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து கிருத்திகா, சுமார் 2 நிமிடத்திற்கு மேல் எஸ்ஐ சஞ்சீவி மீது குற்றம் சாட்டி பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

அரிவாளுடன் இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிட்டவர் கைது: வாள் – கத்தியை பறிமுதல் செய்தனர்

0

 

ஆத்தூர் பகுதியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் அரிவாளுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேல ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் நவீன் ஹரிஷ் (23) என்பவர் கையில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து நவீன்ஹரிஸ் என்பவரை நேற்று கைது செய்து அவரிடமிருந்த ஒரு வாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ அல்லது ஆயுதங்களை வைத்துக்கொண்டோ பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 எதிரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டும், அதே போன்று பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்து ரவுடித்தனம் செய்தல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களில்  ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது

தூத்துக்குடியில் இரண்டு சகோதரர்கள் கொன்று புதைப்பு இரண்டு உடலை நாய் கவ்வியதால் சிக்கிய போதை கும்பல்

0

 

தூத்துக்குடியில் போதை கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பியை அடித்துக் கொன்று புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரது உடல்களும் நேற்று தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி கோயில் பிள்ளை நகர் அருகே பண்டுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரை கடந்த 25ம்தேதி முதல் காணவில்லை என்று அவரது அண்ணன் பொன்ராஜ் அளித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் பண்டுக்கரை பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஒருவரது கை மட்டும் நேற்று முன்தினம் மாலை வெளியே தெரிந்ததால், நாய் அந்த கையை இழுத்து வெளியே போட்டுள்ளதாக தெர்மல்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அது மாயமான அருள்ராஜாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதற்கிடையே அவரது அண்ணன் மாரிபாண்டியும் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், தாசில்தார் முரளிதரன் உள்ளிட்டோர் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை தாசில்தார் முரளிதரன் முன்னிலையில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது முதலில் அருள்ராஜின் அண்ணன் மாரிபாண்டி உடல் கிடைத்தது. தொடர்ந்து தோண்டியதில் கீழே அருள்ராஜ் உடலும் இருந்தது. இருவரது உடல்களும் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரிதன், முனீஸ்வரன், லிங்கராஜ், காதர்மீரான் நகரைச் சேர்ந்த சங்கர் ஆகிய 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரிதன் சகோதரர் கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ரிதனுக்கும், மாரிபாண்டி குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 28ம்தேதி பண்டுக்கரை உப்பாத்து ஓடை பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது ரிதன் கும்பலுக்கும், அங்கு வந்த மாரிபாண்டி, அருள்ராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரிதன் கும்பல், மாரிபாண்டியை வீடு புகுந்து மிரட்டல் விடுத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற அண்ணன், தம்பி இருவரும் மாயமாகியுள்ளனர். மாரிபாண்டி அடிக்கடி வெளியூர் சென்று 10 நாட்கள் கழித்து வருவார் என்பதால் அவரை பற்றி வீட்டினர் யாரும் கவலைப்படவில்லை.

ஆனால் அருள்ராஜ் விபத்தில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர் என்பதால் மறுநாள் இரவு வரை வீடு திரும்பாததால் சந்தேகம் ஏற்பட்டு, அவரது சகோதரர் பொன்ராஜ் தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையில் அவர்களை ரிதன் கும்பல் கடத்திச் சென்று அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உப்பாத்து ஓடை பகுதியில் குழி தோண்டி இருவரையும் ஒரே இடத்தில் புதைத்துள்ளனர். நேற்று முன்தினம் (31ம்தேதி) மாலை சுமார் 3 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட மாரிபாண்டியின் கையை நாய் கவ்வி இழுத்ததால் தான் இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. இதையடுத்து ரிதன், முனீஸ்வரன், லிங்கராஜ், சங்கர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் ஆணவ படுகொலை

0

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் ஊழியர் கவின் நெல்லை பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு விசாரணை அதிகாரியான நெல்லை மாநகர காவல்துறை மேற்குத் துணை ஆணையர் பிரசன்ன குமார், கவினின் சகோதரர் பிரவீனிடம் இன்று விசாரணையைத் தொடங்கினார்.

கவின், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியை ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கடந்த முன்தினம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சுபாஷினியின் தந்தை சரவணகுமார், தாய் கிருஷ்ணகுமாரி, சகோதரர் சுர்ஜித் ஆகர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.*
*சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, கவினின் செல்போனில் உள்ள தகவல்களைச் சேகரிக்கும் வகையில், பிரவீன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

பிரவீனிடம், கவினின் காதல் மற்றும் குடும்பத்தில் அவர் இது குறித்து ஏதேனும் தெரிவித்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணை அதிகாரிகள், கவினின் செல்போனில் உள்ள தகவல்களைச் சேகரித்துள்ளனர்.

கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது  பெற்றோர் சரவணன், கிருஷ்ணவேணி எஸ்.ஐ. பணியில் இருந்து சஸ்பெண்ட்.        இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வரும் நிலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்தார்

கவின் ஆணவக் கொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்த பரபரப்பான கொலை வழக்கில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன

 

இந்த நிலையில், நெல்லை வாட்சப் குழுக்களில் சுர்ஜிர் அரிவாள்களுடன் பல்வேறு போஸ்ட்களை இன்ஸ்டாவில் வெளியிட்டதாக புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன

அவற்றில், கையில் அரிவாளுடன் சுர்ஜித் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார்.

திருநெல்வேலி மாநகரிலும் மாவட்டத்திலும் அரிவாளை காட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் காவல்துறை சுர்ஜித்தை மட்டும் எப்படி கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? என்றும் பெற்றோர் போலீசில் பணி புரிபவர்கள் என்பதால், கண்டுகொள்ளாமல் விட்டார்களா? என்றும் கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி வெட்டி படுகொலை சம்பவம்

0

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவில் பாரதியார் நகரை சேர்ந்த கண்ணன்(45)
அவருடைய சகோதரர் கார்த்திக் (37)ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி தற்பொழுது தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் அதில் முதல் கட்டமாககொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகளை அமைத்தது மாவட்ட காவல்துறை விசாரித்தனர் அதில் முன்விரோதம் காரணமாக இரண்டு சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது

ஆவுடையார் கோவில் பகுதியில் 2 சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேர் கைது

ரூ.40 ஆயிரம் பண பிரச்சினையால் கண்ணன்,கார்த்திக்கை காளிதாஸ் மற்றும் முத்துக்குமார் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்

கும்மிடிப்பூண்டி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில வாலிபர் கைது

0

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் வட மாநில வாலிபர் அதிரடி கைது:

புகைப்படத்தை பார்த்த சிறுமி உடைந்த பல்லை அடையாளம் காட்டி உறுதி செய்தார்*

கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வட மாநில வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.*

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் செல்லியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆரம்பாக்கம் பஜார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12ம் தேதி பள்ளியிலிருந்து தனது பாட்டி வீட்டிற்கு சென்ற சிறுமியை பின்தொடர்ந்து சென்ற வடமாநில வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையிலும், பிறகு பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது தொடர்பாக, ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், ஆரம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வடமாநில வாலிபர் ஒருவர் சிறுமியை பின்தொடர்ந்து செல்வது பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளின் அடிப்படையில் வடமாநில வாலிபரை போலீசார் தீவிரமாக தேடினர். ஆனாலும், குற்றவாளியை கைது செய்ய முடியாமல் திணறினர். எனவே, குற்றவாளியை கைது செய்யக்கோரி, பல்வேறு அரசியல் கட்சியினர், தனியார் அமைப்பினர் மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர். இதற்கிடையே, 10 நாட்களுக்கு மேல் விசாரணை நடத்தி வந்த நிலையில், குற்றவாளி பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தனர்.

மேலும், டிஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சுமார் 15 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஆந்திர மாநிலம் சூலூர்ப்பேட்டை, நெல்லூர், குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடினர். மேலும் புறநகர் ரயில்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மதியம் சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லூர் புறப்பட்ட மின்சார ரயிலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரின் முக ஜாடையுடன் கஞ்சா போதையில் தள்ளாடியபடி ஒருவர் ஏறினார். இதைக் கண்ட தனிப்படை போலீசார் அந்த நபருடன் ரயிலில் பயணம் செய்தனர்.

சூலூர்ப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த நபர் பெட்டிக்கடை அருகே சென்று அமர்ந்தார். அப்போது, தனிப்படை போலீசார் அந்த நபரை செல்போனில் படம் பிடித்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீயின் வாட்ஸ்அப்புக்கு அனுப்பினர்.  இதையடுத்து, சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற டிஎஸ்பி ஜெயஸ்ரீ அந்த புகைப்படத்தை சிறுமியிடம் காட்டினார். அப்போது, சிறுமி இந்த நபர்தான் என்று அடையாளம் காட்டினார்.

அதேநேரம் அவனது பல் உடைந்து இருந்ததாகவும் சிறுமி தெரிவித்தார். இதையடுத்து, டிஎஸ்பி ஜெயஸ்ரீ, தனிப்படை போலீசாரை தொடர்பு கொண்டு அந்த நபரை கைது செய்யுமாறு தெரிவித்தார். மேலும், அவனது பல் உடைந்துள்ளதா என்று பார்க்குமாறு கூறினார். போலீசார் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும், அவனது பல் உடைந்திருப்பதை உறுதி செய்தனர். பின்னர், ஆரம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையம் முன்பு குவிந்தனர். இதையடுத்து, போலீசார் அந்த நபரை காரில் ஏற்றி ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்த நபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், சூலூர்ப்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், கஞ்சா போதையில் ஆரம்பாக்கம், அக்கம்மாபேட்டை, தடா பகுதிகளில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.                  சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர் அதில் விடிய விடிய விசாரணை செய்து வடமாநில இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை  நிறைவடைந்ததால் இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டார்

டிக்டாக் அபிராமியை பார்த்து நீதிபதி சொன்னது என்ன?

0

 

இருவருக்கும் தூக்கு தண்டனை தான் கொடுத்திருக்கனும் – டிக்டாக் அபிராமியை பார்த்து நீதிபதி சொன்னது என்ன?

* தனது குழந்தைகளை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளி அபிராமி, 2வது குற்றவாளி மீனாட்சி சுந்தரம் என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி உணவு இடைவேளைக்கு பின் தண்டனை குறித்த விவரங்களை வாசிப்பதாக கூறிச்சென்றார்

* ஆனால் அடுத்த 10வது நிமிடமே நீதிபதி செம்மல், நீதிமன்றத்துக்கு திரும்பினார், இப்படி ஒரு குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்காமல் எப்படி என்னால் சாப்பிட முடியும்?

* அதனால் தண்டனை விவரங்களை வாசித்த பின்னரே சாப்பிட இருப்பதாக கூறி தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார்

* இந்த வழக்கில் அபிராமிக்கும் மீனாட்சி சுந்தரத்துக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம்

* இருந்தாலும் நான் வாழ்வது காந்தி தேசம், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல், உயிருக்கு உயிர் என்று தண்டனை வழங்க முடியாமல் சூழ்நிலை தடுக்கின்றது

* ஒரு தாயே தான் பெற்ற இரு குழந்தைகளை, தன்னுடைய காம இச்சைக்காக கொலை செய்திருப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது

* நம் நாட்டில் பிள்ளை பாக்கியம் இல்லாமல் எத்தனை பெண்கள் தவமிருக்கிறார்கள்? அப்படி இருக்க இது மன்னிக்க இயலாத குற்றம்

* முதல் குற்றவாளியான அபிராமிக்கும், அவருக்கு இணையாக மீனாட்சி சுந்தரத்திற்கும் வாழ் நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து உத்தரவிடுகிறேன்

கோரிக்கையும் நிராகரிப்பும்

* நான் ஏற்கனவே 7 வருடம் சிறையில் இருந்து விட்டேன், எனது தாய் தந்தை இருவரும் 70 வயதை கடந்தவர்கள் அவர்களை பார்த்துக் கொள்ள இருப்பதால் கருணை காட்டவேண்டும் என மீனாட்சி சுந்தரம் கோரிக்கை

* நானும் எனது பெற்றோரை கவனித்துக் கொண்டு மீதி காலத்தை கழிக்க வேண்டும் அதனால் எனது தண்டனையை குறைக்க வேண்டும் என அபிராமியும் கோரிக்கை விடுத்த நிலையில்,

* இந்த பொறுப்புணர்வு காம இச்சைக்காக இரு குழந்தைகளை கொலை செய்வதற்கு முன்பு இருந்திருக்க வேண்டும் இரக்கம் காட்ட இயலாது

– நீதிபதி செம்மல் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்றக்கூடாது

0

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டு ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை, 2 நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்ய, மார்க்சிஸ்ட் கட்சி இவ்வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரியது

அதன்படி, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், செளந்தர், விஜயகுமார் அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது

வியட்நாமில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 34 பேர் உயிரிழப்பு..

0

வியட்நாம் ஹா லாங் கடலோர பகுதியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழப்பு; 11 பேர் உயிருடன் மீட்பு.

திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்.

காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரம்.

 

வியட்நாம் ஹா லாங் கடலோர பகுதியில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உட்பட 34 பேர் பலி. 11 பேர் உயிருடன் மீட்பு!

திடீரென வீசிய சூறைக்காற்றால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல். காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரம்.

டிரம்பின் ‘மாபெரும் மசோதா’: யார் வெற்றி பெறுகிறார்கள், யார் தோற்கிறார்கள்?

0

இந்த சட்டம் 2017 டிரம்ப் வரி குறைப்புகளை நிரந்தரமாக்குகிறது, பல வணிக விலக்குகளை மீட்டெடுக்கிறது, பசுமை எரிசக்தி ஊக்கத்தொகைகளைக் குறைக்கிறது மற்றும் கூட்டாட்சி பாதுகாப்பு வலை திட்டங்களில் ஆழமான வெட்டுக்களை செய்கிறது.

டிரம்பின் பெரிய, அழகான மசோதாவின் சமீபத்தியது: வெள்ளிக்கிழமை அதிகாலை காங்கிரஸ் நிறைவேற்றப்பட்ட மிகப்பெரிய வரி மற்றும் செலவு மசோதாவை – “ஒரு பெரிய, அழகான மசோதா” – அமெரிக்க வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான சட்டங்களில் ஒன்றாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார். ஆனால் இன்று பிற்பகல் மசோதா அவரது கையொப்பத்திற்கு வரும்போது, ​​தொகுப்பின் உண்மையான உலக தாக்கம் தொழில்கள், வருமானக் குழுக்கள் மற்றும் பிராந்தியங்களில் கூர்மையாக மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சட்டம் 2017 டிரம்ப் வரி குறைப்புகளை நிரந்தரமாக்குகிறது, பல வணிக விலக்குகளை மீட்டெடுக்கிறது, பசுமை எரிசக்தி ஊக்கத்தொகைகளைக் குறைக்கிறது மற்றும் கூட்டாட்சி பாதுகாப்பு வலை திட்டங்களில் ஆழமான வெட்டுக்களை செய்கிறது. இந்த மசோதா நிறுவனங்கள், உயர் வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் சில வகையான தொழிலாளர்களுக்கு குறிப்பிடத்தக்க ஆதாயங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மற்றவர்கள் – குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்கள், மருத்துவமனைகள் மற்றும் சுத்தமான எரிசக்தி நிறுவனங்கள் உட்பட – இழப்புகளைச் சந்திப்பார்கள்.

மசோதா நிறைவேற்றப்படுவதால் யார் பயனடைவார்கள்?

அமெரிக்க வர்த்தக சபை மற்றும் வணிக வட்டமேசை போன்ற முக்கிய வணிகக் குழுக்கள், மசோதா நிறைவேற்றப்பட்டதைப் பாராட்டின, 2017 வரிச் சலுகைகள் மற்றும் வேலைகள் சட்டத்தின் முக்கிய கூறுகளை நிரந்தரமாக நீட்டிக்கும் விதிகளைச் சுட்டிக்காட்டின.

இந்தச் சட்டம், நிறுவனங்கள் முதல் ஆண்டில் உபகரணங்கள் வாங்குதல்களை முழுமையாகக் கழிக்கும் திறனை மீட்டெடுக்கிறது – 2023 இல் தொடங்கிய ஒரு கட்ட விலக்கு. 2022 இல் தொடங்கி, ஐந்து ஆண்டுகளில் வணிகங்கள் ஈடுகட்ட வேண்டிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகளின் உடனடி பதிவையும் இது மீட்டெடுக்கிறது.

உற்பத்தியாளர்கள்

புதிய வசதி கட்டுமானத்திற்கான முழுமையான மற்றும் உடனடி விலக்குகளை அனுமதிக்கும் புதிய விதிகளால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். ஜனவரி 19, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த விதி, 2028 இறுதி வரை நீடிக்கும்.

உள்நாட்டு சிப் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அமெரிக்காவில் உற்பத்தி ஆலைகளை உருவாக்கும் குறைக்கடத்தி நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகளையும் இந்த மசோதா மேம்படுத்துகிறது.

சிறு வணிகங்கள் மற்றும் பங்குதாரர்கள்

சட்ட நிறுவனங்கள், மருத்துவ நடைமுறைகள் மற்றும் முதலீட்டு கூட்டாண்மைகள் போன்ற சில பாஸ்-த்ரூ நிறுவனங்களின் உரிமையாளர்கள், தங்கள் தனிப்பட்ட வரி வருமானத்தில் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியைக் கழிக்க அனுமதிக்கும் வரி விலக்கிலிருந்து தொடர்ந்து பயனடைவார்கள்.

முதலில் 20 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட இந்த விலக்கு மசோதாவின் ஹவுஸ் பதிப்பில் 23 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. செனட் அசல் 20 சதவீதத்தை பராமரித்தது.

அதிக வருமானம் ஈட்டும் அமெரிக்கர்கள்

பென் வார்டன் பட்ஜெட் மாதிரியின்படி, அதிக வருமானம் ஈட்டும் முதல் 20 சதவீதம் பேர் தங்கள் வரிக்குப் பிந்தைய வருமானத்தில் கிட்டத்தட்ட $13,000 வருடாந்திர அதிகரிப்பைக் காண்பார்கள் என்று ஒரு CNN பகுப்பாய்வு காட்டியது.

முதல் 0.1 சதவீதத்தினருக்கு, சராசரி ஆதாயம் ஆண்டுக்கு $290,000 க்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா தற்காலிகமாக $500,000 வரை சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு மாநில மற்றும் உள்ளூர் வருமான வரி (SALT) விலக்கு வரம்பை ஆண்டுக்கு $40,000 ஆக உயர்த்துகிறது, இது அதிக வரி உள்ள மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது.

புதிய விதி, மில்லியனர்கள் வேலையின்மை சலுகைகளைப் பெறுவதைத் தடுக்கிறது.

டிப்ஸ் மற்றும் கூடுதல் நேரம் பெறும் தொழிலாளர்கள்
டிப்ஸ் பெறும் தொழிலாளர்கள் 2028 வரை தங்கள் டிப்ஸ் வருமானத்தில் $25,000 வரை கூட்டாட்சி வரிகளிலிருந்து கழிக்க அனுமதிக்கப்படுவார்கள். கூடுதல் நேரம் வேலை செய்யும் தொழிலாளர்கள் அந்த வருமானத்தில் $12,500 வரை கழிக்க முடியும். இருப்பினும், இந்த சலுகைகள் வருமான வரம்புகளுக்கு உட்பட்டவை.

இந்த மசோதாவால் யார் பாதிக்கப்படுவார்கள்?குறைந்த வருமானம் கொண்ட அமெரிக்கர்கள்

இந்த மசோதா மருத்துவ உதவி மற்றும் உணவு முத்திரைகளில் பெரிய மாற்றங்களைச் செய்கிறது, இரண்டு திட்டங்களிலும் கூட்டாட்சி பணித் தேவைகளை விதிக்கிறது. அதன் 60 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, மருத்துவ உதவி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உட்பட ஆரோக்கியமான பெரியவர்கள் வேலை செய்ய, தன்னார்வத் தொண்டு செய்ய அல்லது நன்மைகளைப் பராமரிக்க வேலை பயிற்சியில் பங்கேற்க வேண்டும்.

மில்லியன் கணக்கானவர்கள் காப்பீடு அல்லது உதவியை இழப்பார்கள் என்று காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் மதிப்பிடுகிறது. மருத்துவ உதவியிலிருந்து துண்டிக்கப்பட்டவர்களில் சிலர் வேலைவாய்ப்பு அடிப்படையிலான காப்பீட்டைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பென் வார்டனின் கூற்றுப்படி, ஆண்டுக்கு $18,000 க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் வரிக்குப் பிந்தைய, பரிமாற்றத்திற்குப் பிந்தைய வருமானம் $165 அல்லது 1.1 சதவீதம் குறையும். ஆண்டுக்கு $18,000 முதல் $53,000 வரை சம்பாதிப்பவர்கள் $30 அதிகரிப்பு அல்லது 0.1 சதவீதம் குறையும். $53,000–$96,000 சம்பாதிக்கும் நடுத்தர வருமான குடும்பங்கள் சுமார் $1,430 அல்லது 1.8 சதவீதம் அதிகரிப்பைக் காணும்.

செனட் மசோதா மலிவு பராமரிப்புச் சட்ட மானியங்களுக்கான சரிபார்ப்பு செயல்முறையையும் இறுக்குகிறது, இது

த கூட்டாட்சி ஆதரவுகளை நம்பியுள்ள நடுத்தர வருமானம் கொண்ட அமெரிக்கர்களைப் பாதிக்கலாம். ஒட்டுமொத்தமாக, 2034 ஆம் ஆண்டு ஆண்டிற்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காப்பீடு இல்லாமல் போகலாம் என்று CNN மேற்கோள் காட்டிய சட்டமியற்றல் மற்றும் CBO கணிப்புகளின் பகுப்பாய்வு கூறுகிறது.

அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய மசோதாவில் கையெழுத்திட்ட பிறகு குடியரசுக் கட்சியினருடன் சபாநாயகர் மைக் ஜான்சன் வாக்கு எண்ணிக்கையை உயர்த்தினார் காட்டுகிறார். (புகைப்படம்: AP)

மருத்துவமனைகள்

மருத்துவமனைகள், குறிப்பாக மெடிக்கெய்ட் மக்களைச் சேவை செய்பவர்கள், இந்த மசோதாவின் மாற்றங்கள் ஈடுசெய்யப்படவில்லை பராமரிப்பை அதிகரிக்கும் மற்றும் அணுகலைக் குறைக்கும் என்று எச்சரிக்கின்றனர்.

“மெடிக்கெய்டில் கிட்டத்தட்ட $1 டிரில்லியன் குறைப்பு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும்” என்று அமெரிக்க மருத்துவமனை சங்கத்தின் தலைமை நிர்வாகி ரிக் பொல்லாக் CNN இடம் கூறினார். இந்த மசோதாவில் $50 பில்லியன் கிராமப்புற மருத்துவமனை ஆதரவு நிதி சேர்க்கப்பட்டது, இழப்புகளை ஈடுசெய்ய போதுமானதாக இல்லை என்று சங்கம் கூறுகிறது.

தூய்மையான ஆற்றல் மற்றும் மின்சார வாகனங்கள்

செனட் காற்று மற்றும் சூரிய ஆற்றல் மீதான கலால் வரியை நீக்கியிருந்தாலும், வக்கீல்கள் “கொல்லும்” என்று அழைக்கும் இந்த சட்டம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வரிச் சலுகைகளை 2027க்குள் படிப்படியாக நீக்குகிறது. சலுகைகளை கோருவதை கடினமாக்கும் புதிய தேவைகளையும் இது விதிக்கிறது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்கன் க்ளீன் பவர் அசோசியேஷன் இந்த மசோதாவை “பின்னடைவு” என்று கூறியது, இது வேலைகளை இழக்கச் செய்து மின் கட்டணங்களை உயர்த்தும்.

இந்த மசோதா செப்டம்பருக்குப் பிறகு $7,500 வரையிலான மின்சார வாகன வரிச் சலுகைகளையும் முடிவுக்குக் கொண்டுவருகிறது. இந்த சலுகைகள் முதலில் 2032 வரை தொடர திட்டமிடப்பட்டிருந்தன.

பற்றாக்குறை வாதங்கள்

இந்த மசோதா அடுத்த பத்தாண்டுகளில் கூட்டாட்சி பற்றாக்குறையை $3.4 டிரில்லியன் அதிகரிக்கும் என்று CBO கணித்துள்ளது. இது ஏற்கனவே $36.2 டிரில்லியன் தேசிய கடனுக்கு கூடுதலாக வருகிறது.

அதிக பற்றாக்குறைகள் வட்டி விகிதங்களை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அடமானங்கள், கார் கடன்கள் மற்றும் வணிகக் கடன்களின் செலவை அதிகரிக்கும். கூட்டாட்சி அரசாங்கத்தின் சொந்த வட்டி கொடுப்பனவுகள் ஆண்டுக்கு $1 டிரில்லியனைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2017 இல் இருந்ததை விட அதிகமாக உள்ளது மூன்று மடங்கு அதிகமாகும் மற்றும் முழு பாதுகாப்பு பட்ஜெட்டை விட பெரியது.