Home செய்திகள் “பிளாக் டிக்கெட் விற்றவன் எங்களை விமரிசிப்பதா?” – விஜய்யின் டிவிகே-வை விளாசிய சீமான்! இடைத்தேர்தலுக்கு ஆவேச...

“பிளாக் டிக்கெட் விற்றவன் எங்களை விமரிசிப்பதா?” – விஜய்யின் டிவிகே-வை விளாசிய சீமான்! இடைத்தேர்தலுக்கு ஆவேச சவால்!

0
“பிளாக் டிக்கெட் விற்றவன் எங்களை விமரிசிப்பதா?” – விஜய்யின் டிவிகே-வை விளாசிய சீமான்! இடைத்தேர்தலுக்கு ஆவேச சவால்!

 

 

சென்னை: சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றி கழகம் (TVK) மற்றும் அதன் தலைவர் விஜய்யைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.

நடிகருக்கும் தலைவருக்கும் வித்தியாசம் தெரியவில்லையா? நிகழ்ச்சியில் ஆவேசமாகப் பேசிய சீமான், “தமிழ், தமிழன் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்கத் தயங்குபவர்களிடம் நாட்டை ஒப்படைக்கப் பார்க்கிறீர்கள். ஒரு நடிகருக்கும் உண்மையான தலைவருக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது வேதனையானது” என்று சாடினார்.

மேலும், “எங்களை நிதி மோசடிக்காரர்கள் என்று சொல்வதற்கு கள்ளச்சந்தையில் பிளாக் டிக்கெட் விற்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இத்தனை காலம் திமுவை விமரிசித்தவர்கள், இப்போது எங்களை நோக்கி தவறான தகவல்களையும் பொய்களையும் பரப்பி வருகிறார்கள்” எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

மொழிப் பற்றும் இடைத்தேர்தல் சவாலும்: தமிழர்களின் அடையாளத்தையும் மொழியையும் காப்பாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், “பிழைப்புக்காக எந்த மொழியையும் கற்கலாம்; ஆனால் இனத்தின் அடையாளமாகத் தமிழை மட்டுமே முன்னிறுத்த வேண்டும். ஆட்டம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது; விரைவில் மாறப்போகிறது. இடைத்தேர்தல் எப்போது வரும் என்றுதான் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நாங்கள் முழு வீச்சில் களமிறங்கும்போது எதிராளிகளின் நிலைமை என்னவாகும் என்று யோசித்துப் பாருங்கள்” என ஆவேசமாகச் சவால் விடுத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version