Home செய்திகள் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது

0

காரைக்காலில் ஏழை, எளிய மாணவிகளின் முழு கல்லூரி படிப்புக்கு உதவிடும் வகையில் அறக்கட்டளை தொடக்கம். பெற்றோர்கள் வரவேற்பு.

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அம்மனியம்மாள், ஈஸ்வரி ராமநாதன், உமா சுந்தரி கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

இதன் நிறுவனர் உமா சுந்தரி ரிப்பன் வெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில்…

காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பகுதியில் கடந்த 1960 ம் ஆண்டு காந்திஜி ஏழை சிறுமிகளின் அன்பு நிலையம் தொடங்கப்பட்டு மாணவிகளுக்கு கல்வி உதவி மற்றும் உணவுகளை தங்களது முன்னோர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வந்தனர்.

அது காலப்போக்கில் மறைத்து விட்டதால் மீண்டும் ஏழை எளிய மாணவிகளுக்கு உதவிடும் வகையில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக ஜிப்மர் மருத்துவமனை, அவ்வையார் கலை அறிவியல் கல்லூரி, பெரியார் கல்லூரி, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி என நான்கு கல்லூரி மாணவிகளை தேர்வு செய்து முழு கல்லூரி படிப்புக்கு நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளதாக தெரவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பல்வேறு அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவிகளையும் தேர்வு செய்தும் கல்லூரி படிப்புக்கு உதவிடும் வகையில் செயல்பட இருப்பதாக கூறினார் ரெட் நியூஸ் தமிழ் செய்திக்காக காரைக்கால் மாவட்ட செய்தியாளர் மோகன்ராஜ்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version