Monday, June 1, 2026
Google search engine
Homeசெய்திகள்2 வாரங்களில் 'வெள்ளை அறிக்கை'.. ஜூலையில் கூடுகிறது சட்டமன்றம்! முதலமைச்சர் விஜய்யின் முதல் பட்ஜெட்டில் அதிரடி...

2 வாரங்களில் ‘வெள்ளை அறிக்கை’.. ஜூலையில் கூடுகிறது சட்டமன்றம்! முதலமைச்சர் விஜய்யின் முதல் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்?

2 வாரங்களில் ‘வெள்ளை அறிக்கை’.. ஜூலையில் கூடுகிறது சட்டமன்றம்! முதலமைச்சர் விஜய்யின் முதல் பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்புகள்?

 

சென்னை: தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை குறித்த ‘வெள்ளை அறிக்கை’ (White Paper) அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று புதிய நிதியமைச்சர் மரியா வில்சன் அறிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஜூலை முதல் வாரத்தில் புதிய தமிழக வெற்றிக் கழக (TVK) அரசின் முதல் முழுமையான பட்ஜெட் கூட்டத்தொடர் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கோட்டையில் இப்போதே பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் சூடுபிடித்துள்ளன.

📜 புதிய அரசின் முதல் கூட்டத்தொடர்:

நடந்து முடிந்த 17-வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் ஜோசப் விஜய். இந்தச் சூழலில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதால், மரபுப்படி ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் உரையாற்றுடன் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அடுத்த மூன்று நாட்களுக்குச் சட்டமன்றத்தில் விவாதங்கள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் மிக முக்கிய ஆவணமான 2026–27 ஆம் நிதியாண்டிற்கான முழுமையான மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் மரியா வில்சன் தாக்கல் செய்யவுள்ளார்.

💰 பட்ஜெட்டில் இடம்பெறும் TVK-வின் ‘மெகா’ வாக்குறுதிகள்?

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் முந்தைய திமுக அரசால் தாக்கல் செய்யப்பட்டது இடைக்கால பட்ஜெட் மட்டுமே என்பதால், தற்போது டிவிேக அரசு தாக்கல் செய்யப்போவது முழுமையான பட்ஜெட் ஆகும். இதனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் விஜய் மக்கள் முன் வைத்த முக்கிய வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

🎁 பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் முக்கிய திட்டங்கள்:

  • மகளிர் நிதியுதவி உயர்வு: பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவித் தொகையை ₹2,500 ஆக உயர்த்தி வழங்குதல்.

  • இலவச சிலிண்டர்: ஆண்டுக்கு ஆறு சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர்களை முற்றிலும் இலவசமாக வழங்குதல்.

  • தாலிக்குத் தங்கம்: பெண்களின் திருமணத்திற்குத் தாலி செய்ய ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல்.

  • குழந்தைகளுக்குத் தங்க மோதிரம்: பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டம்.

⏳ ஆகஸ்ட் வரை நீடிக்கும் மானியக் கோரிக்கைகள் விவாதம்:

சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதன் மீதான பொது விவாதம் அடுத்த நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காரசாரமான விவாதங்களுக்குப் பிறகு நிதியமைச்சர் மரியா வில்சன் பதிலளிப்பார்.

இதனைத் தொடர்ந்து, துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடங்கவுள்ளன. நாளொன்றுக்குக் குறைந்தது நான்கு துறைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்தத் துறை அமைச்சர்கள் விளக்கமளிப்பார்கள். மேலும், தங்கள் துறைகள் சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுவார்கள். இந்தத் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மற்றும் புதிய அறிவிப்புகளுக்கான சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments