தவேக தேர்தல் அறிக்கை வெளியீடு: “அதிமுக போல விரிவானது அல்ல; ஸ்டாலின் போல ஏமாற்ற மாட்டேன்” – விஜய் காட்டம்!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
வித்தியாசமான அணுகுமுறை: தனது கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்துப் பேசிய விஜய், “அதிமுக வெளியிடுவது போன்ற ஒரு மிக விரிவான, பக்கங்கள் நிறைந்த தேர்தல் அறிக்கை எங்களுடையது அல்ல. நாங்கள் சொல்ல விரும்புவதை நேரடியாகவும் சுருக்கமாகவும் சொல்லியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
திமுக மீது நேரடித் தாக்குதல்: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே குடையின் கீழ் செயல்படுவதாக விமர்சித்த அவர், “நிச்சயமாக நான் ஸ்டாலின் சார் போல மக்களை ஏமாற்ற மாட்டேன்” என்று உறுதிப்படத் தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை அவர் தொண்டர்களுக்கு அளித்தார். விஜய்யின் இந்த நேரடி அரசியல் விமர்சனம் சமூக வலைதளங்களில் தற்போத பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
