Friday, October 16, 2026
Homeசெய்திகள்ஓசூரில் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை விழா! சமூக சேவகர் T. ஸ்ரீ ராஜேந்திரனுக்கு "ஜீவகாருண்யா விருது"...

ஓசூரில் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை விழா! சமூக சேவகர் T. ஸ்ரீ ராஜேந்திரனுக்கு “ஜீவகாருண்யா விருது” வழங்கி கௌரவம்!

ஓசூரில் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை விழா! சமூக சேவகர் T. ஸ்ரீ ராஜேந்திரனுக்கு “ஜீவகாருண்யா விருது” வழங்கி கௌரவம்!

 

ஓசூர்:

பல துறைகளில் சாதனை படைத்தவர்களைக் கௌரவிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை சார்பில் அருட்பெருஞ்ஜோதி வடலூர் வள்ளலாரின் 203-வது ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் அறக்கட்டளையின் 6-ஆம் ஆண்டு விழா ஓசூர் மீரா மஹாலில் கடந்த 04.10.2026 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்புனித விழாவில், ஆன்மீக ஆதீனங்கள் மற்றும் சான்றோர்கள் முன்னிலையில், சமூக சேவையில் சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றி தன்னலமற்ற சேவை புரிந்தமைக்காகத் திரு T. ஸ்ரீ ராஜேந்திரனுக்கு “ஜீவகாருண்யா விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விளம்பரமின்றித் தொடரும் ஜீவகாருண்யச் சேவை!

வள்ளலார் எவ்வாறு எல்லா உயிர்களையும் பாரபட்சமின்றி நேசித்தாரோ, அதுபோலவே திரு T. ஸ்ரீ ராஜேந்திரன் எளிமையான முறையில் ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் தொடர்ந்து உதவி புரிந்து வருகிறார்.

இயற்கை மற்றும் உயிரினச் சேவை: செடி, கொடி, மரங்களை நட்டு வளர்ப்பதுடன், ஊர்வன, நடப்பன, பறப்பன போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்கும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

சமுதாய மற்றும் உடல்நலப் பணி: மூலிகைப் பாரம்பரியச் சிந்தனையை ஊக்குவித்து, மக்களின் உடல்நலம் காக்கவும், உயிர்நலம் மேலோங்கவும், மனவளம் பெறவும் பல்வேறு வழிகாட்டுதல்களைச் செய்து வருகின்றார்.

ஆன்மீகத் தொண்டு: ஓசூரில் ‘வாழ்க வளமுடன்’ பயிற்சி மையம் அமைத்தது, பிரம்ம மலையில் பிரம்மதேவர் வழிபாடு, மும்மூர்த்தி கிரிவலம் மற்றும் கண்ணுக்கு மருந்துவிட்டு நோய் நீக்கும் ‘கலிக்கம்’ போன்ற பல்வேறு நற்பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதற்கு இவரே பிரதான காரணமாகத் திகழ்கிறார்.

மகான்களைப் போல எவ்வித விளம்பரமும் இன்றி எளிமையாகச் சேவை புரிந்து வருவதால், இவருக்கு ஏற்கனவே பல சமூக நல அறக்கட்டளைகள் சார்பில் 15-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதீனங்கள் & முக்கியப் பிரபலங்கள் பங்கேற்பு

இவ்விழா விவேகம் அறக்கட்டளையின் தலைவர் திரு M.P. ராஜேந்திரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் ஆன்மீகச் சான்றோர்களான:

சிரவை ஆதீனம் குருமகா சன்னிதானம் குமரகுருபர சுவாமிகள் (கோவை)

பூஜா ஸ்ரீ யோகானந்த சுவாமிகள் (பொள்ளாச்சி)

ஸ்ரீமத் விஷ்வலிங்க தம்பிரான் சுவாமிகள் (மதுரை)

வேலூர் ஆதீனம்

ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.A. மனோகரன், திருப்பூரைச் சேர்ந்த திரு செல்வராஜ், பல துறை வல்லுநர்கள், சிவனடியார்கள், ஆன்மீக அன்பர்கள், சன்மார்க்க நெறியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவு!

விழாவையொட்டி ஜோதி வழிபாடு, அகவல் பாராயணம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், கைலாய வாத்தியம், கேரளா மேளம், பரதநாட்டியம், கோலாட்டம் மற்றும் கும்மியாட்டம் எனப் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. வந்திருந்த அனைவருக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இறுதியாக, அறக்கட்டளையின் நிர்வாகி திரு V. சுரேந்திரன் நன்றி தெரிவிக்க, விழா இனிதே நிறைவுற்றது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments