Monday, August 31, 2026
Homeகல்விஅரசுப் பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்குப் பழங்குடியினர் நல நிதியா? டிடிவி தினகரன் கடும்...

அரசுப் பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்குப் பழங்குடியினர் நல நிதியா? டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு!

அரசுப் பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்குப் பழங்குடியினர் நல நிதியா? டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு!

 

தேனி: தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை’ விரிவுபடுத்த, ‘பழங்குடியினர் நலனுக்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து’ சுமார் ₹6 கோடியைப் பயன்படுத்த அனுமதிக்கும் அரசாணைக்கு (GO) ஏஎம்எம்கே (AMMK) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நிதியைத் திசைதிருப்பக்கூடாது: இது தொடர்பாகத் தனது ‘எக்ஸ்’ (முன்னர் ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டுள்ள டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:

“அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த, பழங்குடியினர் நலனுக்கான சிறப்புச் செயல் திட்ட நிதியிலிருந்து சுமார் ₹6 கோடியைப் பயன்படுத்தும் அரசாணை மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

தரமான கல்வி, குடிநீர், சாலை மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட முழுமையாகக் கிடைக்கப்பெறாத நிலையில் பழங்குடியின மக்கள் இருக்கும்போது, அவர்களது நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு திட்டத்திற்குத் திருப்புவது அவர்களின் முன்னேற்றத்தை மேலும் தாமதப்படுத்தும்.

மாணவர்களின் நலனுக்குக் காலை உணவுத் திட்டம் மிக முக்கியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதியைத் திசைதிருப்புவது சமூக அநீதியாகும். எனவே, இந்த முடிவை அரசு உடனடியாகக் கைவிட்டு, தமிழ்நாடு சமூக நலத் துறை மூலமாகவே இத்திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.”

காலை உணவுத் திட்ட விரிவாக்கம் – முக்கிய விபரங்கள்: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி, செப்டம்பர் 17 முதல் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ விரிவுபடுத்தப்பட உள்ளது.

  • தற்போதைய நிலை: 37,447 பள்ளிகளைச் சேர்ந்த 19,34,230 தொடக்கப் பள்ளி மாணவர்கள் (1 முதல் 5-ஆம் வகுப்பு) பயனடைந்து வருகின்றனர்.

  • புதிய விரிவாக்கம்: 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 12,87,133 கூடுதல் மாணவர்கள் (6 முதல் 8-ஆம் வகுப்பு) பயன்பெறுவர்.

  • நிதி ஒதுக்கீடு: ஒரு ஆண்டில் 210 பணி நாட்களுக்கு, ஒரு மாணவருக்கு ஒரு நாளைக்கு ₹12.71 என்ற செலவு விகிதத்தில் மொத்தம் ₹343.55 கோடி ஆண்டுச் செலவினத்திற்கு நிதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments