Monday, August 31, 2026
Homeசெய்திகள்"காவிரி விவகாரத்தில் தளர்வு வேண்டாம்!" - உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர வழக்கு தாக்கல்!

“காவிரி விவகாரத்தில் தளர்வு வேண்டாம்!” – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர வழக்கு தாக்கல்!

“காவிரி விவகாரத்தில் தளர்வு வேண்டாம்!” – உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர வழக்கு தாக்கல்!

 

சென்னை: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா உரிய தண்ணீரைத் திறந்துவிடத் தவறியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

காவிரி ஆணையத்தின் உத்தரவு: கடந்த ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 12 வரை பிலிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கன அடி (கியூசெக்ஸ்) நீர்வரத்தை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டிருந்தது. இதனை மேலாண்மை ஆணையமும் அங்கீகரித்தது.

கர்நாடகாவின் அலட்சியம்: ஆனால், ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை பிலிகுண்டுலுவில் பதிவான நீர்வரத்து வெறும் 158 முதல் 550 கியூசெக்ஸ் வரை மட்டுமே இருந்தது. தற்போது கர்நாடக அணைகளில் மொத்தம் 77.537 டி.எம்.சி நீர் இருப்பு உள்ள நிலையிலும், தமிழகத்திற்கான விகிதாச்சார நீரைத் திறந்துவிட கர்நாடகா மறுத்து வருகிறது.

கனமழையின் காரணமாகத் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய விகிதாச்சார நீரின் அளவு 26.954 டி.எம்.சி-ஆக உள்ள சூழலில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4.536 டி.எம்.சி ஒதுக்கீடு என்பது மிகக் குறைவானதாகும்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: தமிழகத்திற்கு உரிய நீர் பங்கீட்டை உடனடியாகப் பெற்றுத் தரக் கோரி, சட்ட வல்லுநர்களின் ஆலோசனையின்படி உச்ச நீதிமன்றத்தை அணுக முதலமைச்சர் அறிவுறுத்தினார். அதனடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments