இனி பேங்க் அக்கவுண்ட் நம்பர் மாறாது! ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு ஈஸியா மாறலாம் – RBI-யின் அதிரடி திட்டம்
மும்பை:
செல்போன் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை மாற்றாமல் ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் வசதியைப் போலவே, வங்கி வாடிக்கையாளர்களுக்கும் ஒரு புதிய புரட்சிகரமான வசதியைக் கொண்டு வர இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முடிவு செய்துள்ளது.
புதிய தொழில்நுட்பம் – Payments Switching Service: ரிசர்வ் வங்கியின் ‘பணப்பரிமாற்ற தொலைநோக்கு 2028’ (Payments Vision 2028) ஆவணத்தின் படி, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமலேயே ஒரு வங்கியிலிருந்து வேறொரு வங்கிக்குத் தங்கள் கணக்கை மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளது. இதற்காக ‘பேமெண்ட்ஸ் ஸ்விட்சிங் சர்வீஸ்’ எனும் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளது.
முக்கிய நன்மைகள்:
தற்போது ஒரு வங்கியில் இருந்து வேறொரு வங்கிக்கு மாறினால், பழைய கணக்கு எண் மாறிவிடும். இதனால் நமது சம்பளம் வரும் விவரம், லோன் இஎம்ஐ (EMI), இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் புதிய வங்கியில் ஒவ்வொன்றாக நாமே அப்டேட் செய்ய வேண்டியுள்ளது.
ஆனால், இந்த புதிய வசதி மூலம்:
-
கணக்கு எண் மாறாது: பழைய வங்கி எண்ணையே புதிய வங்கியிலும் பயன்படுத்தலாம்.
-
தானியங்கி அப்டேட்: வங்கியை மாற்றிய உடனே அனைத்துப் பணப்பரிமாற்ற விவரங்களும் தானாகவே புதிய வங்கிக்கு மாறிவிடும்.
-
தடையற்ற சேவை: லோன் தவணைகளைச் செலுத்துவதில் ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்படும்.
சிறந்த வட்டி விகிதம் மற்றும் நவீன டிஜிட்டல் சேவைகளைத் தரும் வங்கிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் தடையின்றி மாற இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
” RED NEWS TAMIL “
01,WEDNESDAY APRIL.2026






