சென்னையில் HCL நிறுவனத்தில் B.Com, M.Com, MBA படித்தவர்களுக்கு வேலை! நேரடி நேர்காணல் அறிவிப்பு!
சென்னை: முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனமான எச்.சி.எல் (HCL), சென்னையில் உள்ள தனது கிளைக்கு ‘பில்லிங் ஆபரேஷன்ஸ்’ (Billing Operations) பிரிவில் அசோசியேட் மேனேஜர் (Associate Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி நேர்காணல் (Walk-in Interview) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
💼 பணி விவரங்கள் & தகுதிகள்:
| விவரங்கள் | முழு விவரம் |
| நிறுவனம் | HCL Technologies, சென்னை |
| பணியின் பெயர் | Associate Manager (Billing Operations) |
| கல்வித் தகுதி | B.Com, M.Com, MBA (Finance) |
| பணி அனுபவம் | 10 முதல் 12 ஆண்டுகள் (Order-to-Cash / Billing) |
| தேவையான திறன்கள் | SAP/ERP பயன்பாடு, 20-25 ஊழியர்களைக் கொண்ட குழுவை நிர்வகிக்கும் திறன், MS Excel தேர்ச்சி |
| சம்பளம் | திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப (நேர்காணலில் தீர்மானிக்கப்படும்) |
📍 நேரடி நேர்காணல் நடைபெறும் இடம் & நேரம்:
-
தேதி: ஆகஸ்ட் 08 மற்றும் ஆகஸ்ட் 09 (இன்றும் நாளையும்)
-
நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை
-
நேர்காணல் முகவரி:
எண்: 602/3, 138, ELCOT SEZ, நுழைவாயில் 2, டவர் 4,
சோழிங்கநல்லூர் அருகில், மேடவாக்கம் நெடுஞ்சாலை,
சோழிங்கநல்லூர், சென்னை – 600 119.
முக்கியக் குறிப்பு: நேர்காணலுக்கு வருபவர்கள் அரசு வழங்கிய அடையாள அட்டை (Govt ID) மற்றும் பயோடேட்டா (Resume) கொண்டு வர வேண்டும். மடிக்கணினிகள் (Laptops) எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
