Monday, August 31, 2026
Homeவிளையாட்டுதிருப்பதியில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா! கூடவே இருந்தது யார் தெரியுமா?

திருப்பதியில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா! கூடவே இருந்தது யார் தெரியுமா?

திருப்பதியில் மொட்டை அடித்து சாமி தரிசனம் செய்த ஹர்திக் பாண்டியா! கூடவே இருந்தது யார் தெரியுமா?

 

திருப்பதி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, திடீரென திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

காதலியுடன் சாமி தரிசனம்: ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் ஹர்திக் பாண்டியா கலந்து கொண்டார். பாரம்பரிய வெள்ளை நிற உடையில் வந்த அவர், தனது காதலியும் மாடல் அழகியுமான மஹிகா சர்மாவுடன் (Mahieka Sharma) சேர்ந்து சாமி தரிசனம் செய்தார். மொட்டை அடித்துக் கொண்டு நெற்றியில் திலகமிட்டபடி அவர் காணப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மீண்டும் இந்திய அணிக்குத் திரும்பத் திட்டம்: சமீபகாலமாக ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடாமல் சிகிச்சை மற்றும் உடற்தகுதிப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த ஹர்திக் பாண்டியா, தற்போது முழு உடற்தகுதியை எட்டியுள்ளார். விரைவில் நடைபெறவுள்ள வெள்ளைப் பந்து (White-ball) கிரிக்கெட் தொடரின் மூலம் அவர் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காயத்திலிருந்து மீண்டு புதிய தொடக்கத்தில் களமிறங்குவதற்கு முன்பாக, இந்த ஆன்மீகப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments