பெண்களுக்கு குட் நியூஸ்:
வங்கிக்கு போக வேண்டாம்.. வரிசையில் நிற்க வேண்டாம்! இனி உங்கள் மொபைல் போனே உங்கள் பேங்க்!
செனைன்: கிராமப்புறப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில், பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) ஒரு புரட்சிகரமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. சுய உதவிக் குழுக்களில் (SHGs) இருக்கும் பெண்களுக்கு அவசரத் தேவைகளுக்காக இனி யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியம் இல்லை.
என்ன இந்த புதிய திட்டம்? பொதுவாக ஒரு சிறிய கடன் வாங்க வேண்டும் என்றாலும் வங்கிகளில் ஏகப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இப்போது ‘பிரதான் மந்திரி ஜன் தன்’ (PMJDY) கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு ₹5,000 வரை ‘ஓவர் டிராஃப்ட்’ (Overdraft) வசதியை வங்கி வழங்குகிறது.
UPI மூலமே பணம் பெறலாம்! இத்திட்டத்தின் சிறப்பம்சமே இதுதான்! நீங்கள் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டியதில்லை. உங்கள் மொபைலில் உள்ள Google Pay அல்லது PhonePe போன்ற UPI செயலிகள் மூலமாகவே இந்த ₹5,000 கடன் வரம்பை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
யாரெல்லாம் பயன்பெறலாம்?
-
சிறிய தையல் கடை வைத்திருப்பவர்கள்.
-
உணவகம் அல்லது சிற்றுண்டி நிலையம் நடத்துபவர்கள்.
-
கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பெண்கள்.
-
திடீர் மருத்துவச் செலவு அல்லது அவசரத் தேவை உள்ள குடும்பப் பெண்கள்.



