பாரத் பெட்ரோலியத்தில் (BPCL) வேலைவாய்ப்பு! மாதம் ₹34,000 சம்பளம் – 154 காலிப்பணியிடங்கள்!
சென்னை: மத்திய அரசுச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited – BPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 154 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தலில் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் பாரத் பெட்ரோலியத்தில் சேர விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
💼 காலிப்பணியிடங்கள் & துறை விவரம்:
| பணியின் பெயர் | காலிப்பணியிடங்கள் |
| செயல்முறை இயக்குபவர் (Process Operator) | 64 |
| செயல்முறை தொழில்நுட்ப வல்லுநர் (Process Technician) | 60 |
| மின்சார தொழில்நுட்ப வல்லுநர் (Electrical Technician) | 17 |
| தொழில்நுட்ப வல்லுநர் / இயக்குபவர் (Chemical) | 13 |
| மொத்த பணியிடங்கள் | 154 |
📌 தகுதிகள் & முக்கிய விவரங்கள்:
-
கல்வித் தகுதி: வேதியியல் பொறியியல் (Chemical Engineering) / வேதியியல் தொழில் நுட்பம் (Chemical Technology) ஆகியவற்றில் பட்டயப் படிப்பு அல்லது இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) / மின் மற்றும் மின்னணுவியல் (EEE) துறையில் டிப்ளமோ (Diploma) முடித்திருக்க வேண்டும்.
-
பணி அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது ஓராண்டு பணி அனுபவம் அல்லது அப்ரண்டிஸ் (Apprenticeship) பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
-
வயது வரம்பு: 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
-
வயது வரம்புத் தளர்வு: OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை தளர்வு உண்டு.
-
-
சம்பளம்: மாதம் ₹26,500 முதல் ₹34,000 வரை வழங்கப்படும்.
-
தேர்வு முறை: கணினி வழித் தேர்வு (CBT), திறன் தேர்வு (Skill Test) மற்றும் மருத்துவப் பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
-
விண்ணப்பக் கட்டணம்: ₹590/-
