Monday, August 31, 2026
Homeவிளையாட்டு2027 உலகக் கோப்பை: 13 பேருக்கு இடம் உறுதி, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை! இந்திய அணியைக்...

2027 உலகக் கோப்பை: 13 பேருக்கு இடம் உறுதி, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை! இந்திய அணியைக் கணித்த அஸ்வின்!

2027 உலகக் கோப்பை: 13 பேருக்கு இடம் உறுதி, சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பில்லை! இந்திய அணியைக் கணித்த அஸ்வின்!

 

சென்னை: 2027-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை (ICC ODI World Cup 2027) தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறக்கூடிய 13 முக்கிய வீரர்களைக் கிரிக்கெட் ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்துள்ளார். அதேவேளையில் சஞ்சு சாம்சன், சிவம் துபே போன்ற பிரபல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றும் அவர் கணித்துள்ளார்.

அஸ்வின் கணித்த 13 உறுதியான வீரர்கள் (Guaranteed 13):

விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அஸ்வின் தேர்வு செய்துள்ள 13 உறுதியான வீரர்கள் பட்டியல்:

  1. ரோஹித் சர்மா

  2. விராட் கோலி

  3. ஷுப்மன் கில்

  4. ஷ்ரேயாஸ் ஐயர்

  5. கே.எல். ராகுல்

  6. இஷான் கிஷன்

  7. ஹர்திக் பாண்டியா

  8. அக்சர் படேல்

  9. குல்தீப் யாதவ்

  10. ஜஸ்பிரித் பும்ரா

  11. முகமது சிராஜ்

  12. ஹர்ஷித் ராணா

  13. புவனேஷ்வர் குமார்

வாய்ப்பு பெறப் போட்டியிடும் 8 வீரர்கள் (Contenders):

மீதமுள்ள இடங்களில் வாய்ப்பைப் பெறப் போட்டியிடும் 8 வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், வருண் சக்ரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரை அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார். பும்ரா அல்லது சிராஜிற்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பில்லை? (Not Considered):

தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளர்களின் தேவை குறைவாகவே இருக்கும் என்பதால் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

மேலும், தொடக்க ஆட்டக்காரர்களுக்கான கடும் போட்டி நிலவுவதால் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோருக்கும், காயத்திற்குப் பின் அணிச் சேர்க்கை சமநிலையைக் கருத்தில் கொண்டு ரிஷப் பண்ட், சிவம் துபே, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் ஆகியோருக்கும் உலகக் கோப்பை அணியில் இடம் கிடைப்பது மிகவும் கடினம் என அஸ்வின் ஓப்பனாகக் கூறியுள்ளார். (ஹர்திக் பாண்டியா ஆட முடியாத சூழல் ஏற்பட்டால் மட்டுமே சிவம் துபே பரிசீலிக்கப்படுவார்).

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments