தூத்துக்குடி மாவட்டம் ஆறுமங்கலத்தைச் சேர்ந்த மென்பொருள் ஊழியர் கவின் நெல்லை பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு விசாரணை அதிகாரியான நெல்லை மாநகர காவல்துறை மேற்குத் துணை ஆணையர் பிரசன்ன குமார், கவினின் சகோதரர் பிரவீனிடம் இன்று விசாரணையைத் தொடங்கினார்.
கவின், பாளையங்கோட்டையைச் சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியை ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கடந்த முன்தினம் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, சுபாஷினியின் தந்தை சரவணகுமார், தாய் கிருஷ்ணகுமாரி, சகோதரர் சுர்ஜித் ஆகர் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.*
*சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, கவினின் செல்போனில் உள்ள தகவல்களைச் சேகரிக்கும் வகையில், பிரவீன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
பிரவீனிடம், கவினின் காதல் மற்றும் குடும்பத்தில் அவர் இது குறித்து ஏதேனும் தெரிவித்தாரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணை அதிகாரிகள், கவினின் செல்போனில் உள்ள தகவல்களைச் சேகரித்துள்ளனர்.
கவின் ஆணவக் கொலை வழக்கில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் சரவணன், கிருஷ்ணவேணி எஸ்.ஐ. பணியில் இருந்து சஸ்பெண்ட். இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வரும் நிலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை டிஐஜி விஜயலட்சுமி நடவடிக்கை எடுத்தார்
கவின் ஆணவக் கொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்த பரபரப்பான கொலை வழக்கில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில், நெல்லை வாட்சப் குழுக்களில் சுர்ஜிர் அரிவாள்களுடன் பல்வேறு போஸ்ட்களை இன்ஸ்டாவில் வெளியிட்டதாக புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றன
அவற்றில், கையில் அரிவாளுடன் சுர்ஜித் வித விதமாக போஸ் கொடுத்துள்ளார்.
திருநெல்வேலி மாநகரிலும் மாவட்டத்திலும் அரிவாளை காட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டாலே கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் காவல்துறை சுர்ஜித்தை மட்டும் எப்படி கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்? என்றும் பெற்றோர் போலீசில் பணி புரிபவர்கள் என்பதால், கண்டுகொள்ளாமல் விட்டார்களா? என்றும் கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.



