24.02.2026 இன்று தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
வாக்குறுதி அறிவிப்புகள்
அதிமுக ஆட்சி அமைந்ததும்உடனடியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணை தொகையாக 10.000 ரூபாய் வழங்கப்படும்,
வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து பட்டதாரிகளுக்கும் மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும்
+2 வகுப்பு வரை படித்து விட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த அனைவருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ,அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 1000. ரூபாய் வழங்கப்படும்
மீன்பிடி மீனவர்களுக்கு தடை காலங்களில் வழங்கும் ரூ.8,000-நிவாரணத் தொகையை ரூ.12,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்
கைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்
விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்
நடை பாதை வியாபாரிகள் பெற்ற கூட்டுறவு சங்க வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
மேற்கண்ட அனைத்து வாக்குறுதிகளும் தமிழ்நாட்டின் வருவாயை பெருக்கி வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என புதிய தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச்செயலாளர் இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்
