TCS-இல் ஒரு சிறந்த வேலைவாய்ப்பு: சென்னை, பெங்களூரு உட்பட 5 முக்கிய நகரங்களில் பணி வாய்ப்புகள்!
சென்னை: முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), புதிய பணியாளர் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே அல்லது கொல்கத்தா ஆகிய நகரங்களில் பணியமர்த்தப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து, நேர்காணல் செயல்முறையில் பங்கேற்கலாம்.

காலிப்பணியிட விபரம்: TCS நிறுவனம் தற்போது ‘Gen AI Developer’ (Generative AI Developer) பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்து வருகிறது.
தகுதி மற்றும் பணி அனுபவம்:
-
விண்ணப்பதாரர்கள் 4 முதல் 12 ஆண்டுகள் வரையிலான தொடர்புடைய பணி அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
-
குறிப்பாக, விரிவுபடுத்தக்கூடிய (scalable) மற்றும் பாதுகாப்பான AI ஏஜெண்டுகள் (AI agents) மற்றும் செயலிகளை (applications) உருவாக்குவதில் 4 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் தேவை.
-
RAG (Retrieval-Augmented Generation) தொழில்நுட்பம் மற்றும் அதன் வகைகளான Graph, Agentic, Context-Augmented மற்றும் Corrective RAG ஆகியவற்றில் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
-
குறைந்தது ஒரு ‘ஹைப்பர்ஸ்கேலர்’ (hyperscaler) தளத்தில் (Google Cloud, Azure அல்லது AWS) தேர்ச்சியும், Python மொழியில் வலுவான அனுபவமும் கட்டாயமாகும்.
ஊதிய விபரம்: இப்பணிக்கான ஊதியம் தற்போதைய அறிவிப்பில் தனியாகக் குறிப்பிடப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் பணி அனுபவம் மற்றும் திறன்களின் அடிப்படையில் ஊதியம் தீர்மானிக்கப்பட்டு, இறுதி நேர்காணல் கட்டத்தின்போது அது குறித்த தகவல் வழங்கப்படும்.
நேர்காணல் நடைபெறும் இடங்கள்: இப்பணிக்கான நேர்காணல்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் கொல்கத்தா ஆகிய 5 முக்கிய நகரங்களில் நடத்தப்படவுள்ளன. அதற்கான முகவரி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
-
சென்னை: TCS Magnum Block, Chennai One IT SEZ Phase-2, 200 Feet Radial Road, MCN Nagar Extension, Thoraipakkam, Chennai – 600 097.
-
பெங்களூரு: No. 45, Industrial Suburb, Tumkur Road, APMC Yard, Bengaluru 560 022.
-
ஹைதராபாத்: TCS Deccan Park, Plot No. 1, Hitech City Main Road, 3N3, Software Units Layout, HUDA Techno Enclave, Madhapur, Hyderabad – 500 081.
-
புனே: TCS Sahyadri Park 1, Plot No. 2 & 3, Phase 3, Hinjewadi Rajiv Gandhi Infotech Park, Pune, Maharashtra 411 057.
-
கொல்கத்தா: TCS Delta Park – Lords Building, Tata Consultancy Services (TCS), Plot C, Block EP and GP, Salt Lake Electronics Complex, Sector V (Bidhannagar), Kolkata, West Bengal – 700 091.
பணி நியமனமும் இந்த 5 முக்கிய நகரங்களிலேயே அமைய அதிக வாய்ப்புள்ளது. அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பார்க்கவும், இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் பின்வரும் லிங்க்கைப் பார்வையிடலாம்: https://www.linkedin.com/jobs/view/4435041768/



