Thursday, April 16, 2026
Google search engine
Homeசெய்திகள்ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை குழு கனிமொழி கலந்து கொண்டார்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை குழு கனிமொழி கலந்து கொண்டார்

தமிழக சட்டபேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி எம்பி அனைத்து சங்கத்தினரிடம் தொழிலாளர்களிடம் மனுக்கள் பெற்றுக் கொண்டார். கருத்து கேட்பு கூட்டம் எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம்,
ராமநாதபுரத்திற்கு திமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி எம்பி வருகை தந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் பல தொழில்கள் செய்து வரும் பல்வேறு சமுதாய மக்கள், வியாபார பெருமக்கள், அனைத்து தொழிலாளர்கள், வியாபாரி சங்கங்கள்,மீனவ சமுதாய சங்கங்கள், ஆகியோரிடம் தனித்தனியாக மனுவைப் பெற்றுக் கொண்டதுடன் அவர்களின் கோரிக்கைகள் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினரிடம் சேர்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிமொழி எம்பி. உறுதி அளித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த கனிமொழி எம்பி, அமைச்சர் பெரியகருப்பன், அப்துல்லா எம்பி, டிகேஎஸ் இளங்கோவன், மானாமதுரை எம்எல்ஏ. தமிழரசி, உள்ளிட்ட குழுவினருக்கு மலர் கொத்துக் கொடுத்தும், புத்தகங்கள் கொடுத்தும் திமுக மாவட்ட செயலாளரும் எம்எல்ஏ.காதர் பாட்சா முத்துராமலிங்கம் பூ கொத்து கொடுத்து புத்தகங்கள் கொடுத்து வரவேற்றார். இதனை அடுத்து
கழக இலக்கிய அணி தலைவர் முன்னாள் எம்பிகள் அன்வர் ராஜா, பவானி ராஜேந்திரன், உள்ளிட்ட சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் மிசா அஹமது தம்பி, ஆகியோர் மலர் கொத்துக் கொடுத்தும்,புத்தகங்கள்(ம) சால்வை கொடுத்தும் வரவேற்றனர். இதில்
முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, டாக்டர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், இராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர் கே.இ.நாசர் கான்,
துணை தலைவர்கள்
தட்சிணா மூர்த்தி, பிரவீன் தங்கம்,மாநில இளைஞரணி துணைத் தலைவர் இன்பா ரகு,மாவட்ட துணை செயலாளர்கள் கருப்பையா, ஆதித்தன்,உள்ளிட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிகாமணி,சாயல்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் குலாம் மொய்தீன்,மண்டபம் பேரூர் கழக செயலாளர் அப்துல் ரகுமான் மரைக்காயர்,மண்டபம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் நிலோபர்கான்,மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் சேசு, இராமேஸ்வரம் போஸ்,மீனவர் சங்கப் பிரதிநிதி தேவதாஸ், கீழக்கரை நகர்மன்ற துணை தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்
ஸ்டெல்லா அகஸ்டீன்,
காஞ்சிரங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர் கோடாங்கி முனியசாமி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சீனி செய்யது ,சின்ன கடை பாசி பட்டறைத்தெரு ஜமாஅத் நிர்வாக டிரஸ்டி அஸ்ரப் அலி, டிரஸ்டி ஜவாஹிருல்லா உள்ளிட்ட நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஒளிப்பதிவாளர் M.N. அன்வர் அலி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments