Monday, July 13, 2026
Homeசெய்திகள்கட்சி கட்டிட நிதியில் முறைகேடா? சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் மீது சொந்தக் கட்சியினரே...

கட்சி கட்டிட நிதியில் முறைகேடா? சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் மீது சொந்தக் கட்சியினரே பரபரப்பு புகார்!

கட்சி கட்டிட நிதியில் முறைகேடா? சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் மீது சொந்தக் கட்சியினரே பரபரப்பு புகார்!

 

 

எப்போதும் ஏழை எளிய மக்களுக்காக பாடுபடும் சாமானிய மக்களின் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்பதை எதிர்க்கட்சியினரும் ஏற்றுக் கொள்வார்கள்

 

அப்படிப்பட்ட ஒரு புனிதமான கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் N.சுப்பிரமணியன் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கட்சியையும் மக்களையும் ஏமாற்றி செய்யும் அட்டூழியம்

 

ஒரு ஏக்கர் அளவு கூட இல்லாத சிறு விவசாயி என்று சொல்லிக்கொண்டு கட்சி கொடுக்கிற 8000, 10000 சம்பளத்தை நம்பி வாழ்வதாக சொல்லும் இவரால் எப்படி பிரம்மாண்டமான வீடு கட்ட முடிந்தது

 

மயிலம் ஒன்றிய குழு அலுவலகம் கட்ட மாவட்ட முழுவதும் சுப்பிரமணியன் அவரது சக தோழர் ராஜேந்திரன் இருவரும் சேர்ந்து அரசு அதிகாரிகளையும்,கல் குவாரி முதலாளிகளையும் உள்ளிட்ட பலரையும் மிரட்டி வசூல் செய்து

 

பேருக்கு அலுவலகத்தை கட்டிக்கொண்டு அவரது சுப்பிரமணியன் வீட்டை பிரம்மாண்டமாக கட்டி வருகிறார்

 

இது அந்த சின்ன கிராமத்து மக்களிடம் பேசு பொருளாக மாறி உள்ளது கட்சிக்கு கெட்ட பெயரை உண்டாக்கி வருகிறது சுப்பிரமணியனும் ராஜேந்திரனும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கே தெரியாமல் வரைமுறையின்றி வசூல் செய்து கட்சி கட்டிடத்திற்கு என்று நம்பி சில நல்ல எண்ணம் கொண்டவர்கள் கொடுத்த பொருட்களை தனது சொந்த வீட்டிற்கு எடுத்துச் சென்று பிரம்மாண்டமான வீடு கட்டி வருகிறார் என்று மயிலம் ஒன்றியத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்

 

ஆகவே கட்சியின் நலன் கருதி கட்சியின் மாநில தலைமை குழு இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments