Monday, June 1, 2026
Google search engine
Homeசெய்திகள்விழுப்புரம் மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ மீது எஸ்பியிடம் அதிகாரப்பூர்வ புகார்: "நீதிமன்றம் மூலம் தீர்வு...

விழுப்புரம் மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ மீது எஸ்பியிடம் அதிகாரப்பூர்வ புகார்: “நீதிமன்றம் மூலம் தீர்வு காண்போம்” எனத் திரும்பிய புகார்தாரர்!

விழுப்புரம் மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ மீது எஸ்பியிடம் அதிகாரப்பூர்வ புகார்: “நீதிமன்றம் மூலம் தீர்வு காண்போம்” எனத் திரும்பிய புகார்தாரர்!

விழுப்புரம்: விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் (SI) புனிதவெல்லி ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தியதாகக் கூறி, முஸ்லிம் மக்கள் லீக்கின் நிறுவனத் தலைவரும் சமூக ஆர்வலருமான டாக்டர் எஸ்.எஸ். ஜெயினுதீன், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் (SP) நேரடிப் புகார் மனு அளித்துள்ளார்.

புகார் மனுவின் பின்னணி:

விக்ரவாண்டி தாலுகா, வி. மருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (த/பெ கோதண்டராமன்). இவருக்கும் இவரைப் பிரிந்து வாழும் அவரது மனைவி பிரித்திப்ரியா (என்ற) பாவாலாவிற்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இருவரையும் பேசி ஒன்று சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த 22-05-2026 அன்று விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் பாஸ்கரன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த புகாரைப் பெற உதவி ஆய்வாளர் புனிதவெல்லி மறுத்ததாகக் கூறப்படும் சூழலில், பின்னர் உரியப் பரிந்துரையின் பேரில் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கடந்த 23-05-2026 அன்று இரு தரப்பினரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

எஸ்பி-யிடம் அளிக்கப்பட்ட புகாரில் உள்ள குற்றச்சாட்டுகள்:

விசாரணையின்போது புகார்தாரர் பாஸ்கரன், அவரது தாயார், ஒரு வழக்கறிஞர் ஆகியோருடன் முஸ்லிம் மக்கள் லீக்கின் தலைவர் டாக்டர் எஸ்.எஸ். ஜைனுதீன் மற்றும் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்டுள்ள புகாரில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:

  • உதவி ஆய்வாளர் புனிதவெல்லி இரு தரப்பு நியாயங்களையும் சமமாக விசாரிக்காமல், ஒரு தரப்பிற்கு மட்டுமே சாதகமாக, முற்றிலும் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டுள்ளார்.

  • காவல் நிலையத்திற்கு வந்திருந்த ஆண்கள் மற்றும் பெண்களிடம் அவர் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ளவில்லை.

  • அதிகாரத் தொனியிலும், மிரட்டும் பாணியிலும் பேசியதால் புகார்தாரர் தரப்பினருக்குக் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

“நீதிமன்றத்தை நாடுகிறோம்” – கடிதம் கொடுத்த புகார்தாரர்:

காவல் நிலைய விசாரணையில் எவ்வித நியாயமும் கிடைக்காது என்பதை உணர்ந்த புகார்தாரர் தரப்பினர், “நாங்கள் நீதிமன்றத்தின் மூலம் எங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண்போம்” என்று காவல் நிலையத்திலேயே எழுத்துப்பூர்வமாகக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுத் திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலையிட்டு, பொதுமக்களிடம் அதிகாரத் தோரணையில் நடந்துகொண்ட உதவி ஆய்வாளர் புனிதவெல்லிக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நியாயமான விசாரணை கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு அளிப்பின்போது திண்டிவனம் ஏ. தாவூதலி, ஏ. முஹம்மது சாதிக், இ. சர்தார் அகமது, ரஞ்சித், ஏ. மணிகண்டன், முத்துக்கிருஷ்ணன், மேல்மலையனூர் ஆண்டவர், அமிர்தம், மல்லிகா, விஷால், திவான் மற்றும் ஐயர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments