Monday, June 1, 2026
Google search engine
Homeசெய்திகள்முதல்வர் விஜயின் 'நிழல்களாக' மாறிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள்! எந்த IAS-க்கு எந்தத் துறை? வெளியான...

முதல்வர் விஜயின் ‘நிழல்களாக’ மாறிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள்! எந்த IAS-க்கு எந்தத் துறை? வெளியான அதிரடிப் பட்டியல்!

முதல்வர் விஜயின் ‘நிழல்களாக’ மாறிய 4 ஐஏஎஸ் அதிகாரிகள்! எந்த IAS-க்கு எந்தத் துறை? வெளியான அதிரடிப் பட்டியல்!

 

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று எட்டு நாட்கள் நிறைவடைந்துள்ள சூழலில், முதலமைச்சர் விஜய் அவர்களின் கீழ் பணிபுரியும் நான்கு தனிச் செயலாளர்களுக்கான துறைசார் பொறுப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன. நிர்வாக வசதிக்காக எந்தெந்த அதிகாரிகளுக்கு என்னென்ன துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்ற வியக்கத்தக்க பட்டியல் இதோ:

முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் IAS, செயலாளர்-2 ஆக லட்சுமி பிரியா IAS, செயலாளர்-3 ஆக அண்ணாதுரை IAS மற்றும் கூடுதல் செயலாளராக விஷ்ணு IAS ஆகியோர் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான துறைகள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளன.

அதிகாரி மற்றும் பதவி துறைகளின் எண்ணிக்கை ஒப்படைக்கப்பட்டுள்ள முக்கியத் துறைகள்

செந்தில்குமார், IAS


(முதன்மைச் செயலாளர்)

10 துறைகள் நிதி, உள்துறை, கலால், பொது மற்றும் மறுவாழ்வு, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், எரிசக்தி, தொழில்கள் (முதலீடு & பொருளாதாரம்), நெடுஞ்சாலைகள் (சிறு துறைமுகங்கள்), மருத்துவம் மற்றும் குடும்ப நலம், ஊழல் தடுப்புத் துறை.

லட்சுமி பிரியா, IAS


(செயலாளர்-2)

12 துறைகள் முதலமைச்சர் அலுவலக ஒட்டுமொத்த நிர்வாகம், முதலமைச்சரின் சுற்றுப்பயணங்கள், உயர்கல்வி, பள்ளிக்கல்வி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, சமூக நலம், மகளிர் மேம்பாடு, பிற்படுத்தப்பட்டோர் (மிகவும் பிற்படுத்தப்பட்டோர் & சிறுபான்மையினர் நலம்), ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், மாற்றுத்திறனாளிகள் நலம்.

அண்ணாதுரை, IAS


(செயலாளர்-3)

12 துறைகள் இயற்கை வளங்கள், நீர்வளங்கள், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம், கால்நடை பராமரிப்பு (பால்வள மேம்பாடு), மீன்வளம் மற்றும் மீனவர் நலம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, சமூக சீர்திருத்தங்கள், கைத்தறி (கைவினைப்பொருட்கள், ஜவுளி, கதர்), போக்குவரத்து, சட்டம் மற்றும் சட்டமன்றச் செயலகம், மனிதவள மேம்பாடு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை.

விஷ்ணு, IAS


(கூடுதல் செயலாளர்)

9 துறைகள் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை, சுற்றுலா (கலை மற்றும் கலாச்சாரம்), இந்து சமய அறநிலையங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME), தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாடு, தொழிலாளர் நலம் மற்றும் திறன் மேம்பாடு, திட்டமிடல் மற்றும் மேம்பாடு, சிறப்புத் திட்ட அமலாக்கம்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments