Wednesday, September 23, 2026
Homeஇந்தியா"தமிழ் சினிமாவுக்கு 10 தேசிய விருதுகள்!" — குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்: தனுஷ்,...

“தமிழ் சினிமாவுக்கு 10 தேசிய விருதுகள்!” — குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்: தனுஷ், ஜி.வி.பிரகாஷ் உட்பட வெற்றியாளர்களின் முழு பட்டியல்!

“தமிழ் சினிமாவுக்கு 10 தேசிய விருதுகள்!” — குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்: தனுஷ், ஜி.வி.பிரகாஷ் உட்பட வெற்றியாளர்களின் முழு பட்டியல்!

 

 

காந்தி நகர் / சென்னை:

இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் விருது வழங்கும் விழா குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் கோலாகலமாக நடைபெற்றது. நாட்டின் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

இந்த விழாவில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட மொத்தம் 10 பேருக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.

🎬 அமரன் படத்திற்கு 3 தேசிய விருதுகள்!

சிவகாத்திகேயன் நடிப்பில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அமரன்’ திரைப்படம் 3 முக்கியப் பிரிவுகளில் தேசிய விருதுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளது:

  1. சிறந்த பின்னணி இசை: ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்)

  2. சிறந்த இயக்குநர்: ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)

  3. சிறந்த படத்தொகுப்பு (Editing): கலைவாணன் (அமரன்)

💥 தனுஷ் படங்களுக்கு 3 விருதுகள் & மகாராஜாவுக்கு 2 விருதுகள்!

நடிகர் தனுஷின் நடிப்பிலும் இயக்கத்திலும் வெளியான திரைப்படங்கள் 3 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளன. அதேபோல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் 2 விருதுகளைப் பெற்றுள்ளது.

  • சிறந்த தமிழ்த் திரைப்படம்: ‘ராயன்’ (தயாரிப்பாளர் காவேரி கலாநிதி மாறன் – சன் பிக்சர்ஸ் பெற்றுக்கொண்டார்).

  • சிறந்த நடிகர் (சிறப்புப் பிரிவு): தனுஷ் (கேப்டன் மில்லர்).

  • சிறந்த திரைப்படம் (தேசம், சமூகம் & சுற்றுச்சூழல் சிறப்புப் பிரிவு): ‘கேப்டன் மில்லர்’.

  • சிறந்த துணை நடிகை: சச்சனா நமிதாஸ் (மகாராஜா).

  • சிறந்த சண்டைப் பயிற்சி (Stunt): அனல் அரசு (மகாராஜா).

🎧 தொழில்நுட்பப் பிரிவு மற்றும் ஆவணப்பட விருதுகள்:

  • சிறந்த ஒலிக் கலவை (Sound Mixing – சிறப்புப் பிரிவு): சுரேன்.ஜி (மெய்யாழகன்).

  • சிறந்த ஒலிக் கலவை (திரைப்படமல்லாத பிரிவு): டி.எஸ். ஹரிஹர சூதன் (‘ப்ளூ’ ஆவணப்படம்).

தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்த அனைத்து தேசிய விருது வெற்றியாளர்களுக்கும் திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments