Home செய்திகள் ₹1 கோடி கொள்ளை! கோவை தொழிலதிபரை கள்ளக்குறிச்சி வரை துரத்திப் பிடித்த போலீஸ்!

₹1 கோடி கொள்ளை! கோவை தொழிலதிபரை கள்ளக்குறிச்சி வரை துரத்திப் பிடித்த போலீஸ்!

0
₹1 கோடி கொள்ளை! கோவை தொழிலதிபரை கள்ளக்குறிச்சி வரை துரத்திப் பிடித்த போலீஸ்!

 

 

கோயம்புத்தூர்:

தங்க நகைகளை வாங்குவதற்காகக் கோயம்புத்தூருக்கு வந்த தெலங்கானா மாநிலத் தொழிலதிபரிடம் ₹1 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களைக் கள்ளக்குறிச்சி வரை துரத்திச் சென்று காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

நடந்தது என்ன?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 66 வயது தொழிலதிபர் தாமன் ரங்கசாமி. இவர் நகைக்கடை நடத்தி வருகிறார். நகைகள் வாங்குவதற்காக ₹1 கோடி ரொக்கப் பணத்துடன் பேருந்தில் கோயம்புத்தூர் வந்துள்ளார். அவினாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய சிறிது நேரத்திலேயே, அடையாளம் தெரியாத நபர்கள் தாமனிடமிருந்து பணமிருந்த பையைப் பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.

காவல்துறையின் அதிரடி நடவடிக்கை:

தாமன் கொடுத்த புகாரின் பேரில், ரேஸ் கோர்ஸ் காவல்துறையினர் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர். கொள்ளையர்கள் திருடப்பட்ட பணத்துடன் கள்ளக்குறிச்சி நோக்கித் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) ஷாநவாஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி எஸ்பி ஷாநவாஸ் தலைமையிலான காவல் குழுவினர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வழியாகச் சென்ற கார்களை ஒவ்வொன்றாகச் சோதனையிட்டபோது, ​​திருடப்பட்ட ₹1 கோடி ரொக்கப் பணத்துடன் கொள்ளையர்கள் சிக்கினர்.

விசாரணை:

கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த தாமனின் நடமாட்டத்தைக் கொள்ளையர்கள் முன்கூட்டியே கண்காணித்து இந்தக் கொள்ளைச் சம்பவத்தைத் திட்டமிட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version