Home செய்திகள் “அதிக மின் கட்டணம் தானாகவே ரத்து?!” – நுகர்வோருக்கு TNPDCL வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

“அதிக மின் கட்டணம் தானாகவே ரத்து?!” – நுகர்வோருக்கு TNPDCL வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

0
“அதிக மின் கட்டணம் தானாகவே ரத்து?!” – நுகர்வோருக்கு TNPDCL வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

 

 

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அதிர்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்து வந்த அதிகப்படியான மின்சாரக் கட்டணம் குறித்த புகார்களுக்குத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம் (TNPDCL) நுகர்வோருக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கும் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.

அதன்படி, செப்டம்பர்-அக்டோபர் காலத்திற்கான மின்சாரக் கட்டணம் முந்தைய மாதங்களை விட 20 சதவீதத்திற்கு மேல் திடீரென அதிகரித்தால், அந்த மின்கட்டண பட்டியல் தயாரிப்பு முறை தானாகவே நிறுத்தி வைக்கப்பட்டு மறுஆய்வு செய்யப்படும்.

மின்கட்டண உயர்வு & பணியாளர் பற்றாக்குறை!

வழக்கமாக ₹300 முதல் ₹500 வரை கட்டணம் செலுத்திய நுகர்வோருக்கு ₹5,000 வரையிரும், பூட்டப்பட்டிருந்த வீடுகளுக்குக் கூட அதிகக் கட்டணம் வந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

  • காரணம் என்ன?: TANGEDCO-வில் 60% மதிப்பீட்டாளர் (Assessor) மற்றும் 42% ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், நேரடி அளவீடு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டு உத்தேச அளவீட்டின் (Average billing) அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்பட்டதே இந்தத் திடீர் உயர்வுக்கு முதன்மைக் காரணமாகக் கூறப்படுகிறது.

🔍 கட்டண உயர்வை ஆய்வு செய்ய சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்திய வீடுகளின் கட்டணம் 20% மேல் அதிகரித்தால், அவை தனிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு பின்வரும் அதிகாரிகளால் மறுசரிபார்ப்பு செய்யப்படும்:

  • ₹1,000 வரை உயர்வு: IA அல்லது RS ஆய்வாளர்

  • ₹1,001 முதல் ₹2,000 வரை: வருவாய் பிரிவு AS

  • ₹2,001 முதல் ₹5,000 வரை: ADO அதிகாரி

  • ₹5,001 முதல் ₹10,000 வரை: வருவாய் பிரிவு AAO

  • ₹10,000-க்கு மேல்: துணைப் பிரிவு AEE அதிகாரி

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version