Thursday, April 16, 2026
Google search engine
Homeசெய்திகள்திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பாக 50-க்கும் மேற்பட்டோர்

கிராம நிருவாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிருவாக அலுவலகத்தை கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிருவாக அலுவலகமாக அமைத்து தரக்கோருதல்.

கிராம நிருவாக அலுவலர்களின் TNPSC நேரடி நியமன முறையில், கல்வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க கோருதல்.

கிராம நிருவாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ள நிலையில் பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும், இருபதாண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட கோருதல்.

கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வில் கிராம நிருவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களின் விகிதாச்சாரங்களுக்கேற்ப, 30சதவீதம் என்பதிலிருந்து 50சதவீதமாக மாற்றம் செய்து, கிராம நிருவாக அலுவலர்களின் பதவி உயர்வுக்கான கால வரம்பை 6 ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட கோருதல்,

தேர்வுநிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்புநிலை கிராம நிருவாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க கோருதல்.

TSLR பட்டா மாறுதலில் கிராம நிருவாக அலுவலர்களின் பரிந்துரை பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த கோருதல்.
உள்ளிட்ட 6அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம்
வட்டத் தலைவர் G. வெங்கடாசலம் தலைமை வகித்தார், வட்டச் செயலாளர் p. ரமேஷ் வரவேற்புரை ஆற்றினார்,

மாவட்ட செயலாளர் அ.ஏழுமலை, கௌரவ தலைவர்,V. பலராமன், மற்றும் வட்ட ஒருங்கிணைப்பாளர் உத்திரகுமார் முக்கிய உரை ஆற்றினார்கள்,

வட்டத் துணைத் தலைவர் பரணிதரன், இனண செயலாளர்கள் மதியழகன், காமேஷ் குமார் போராட்டத் திருபுரையாற்றினார்கள்,

வட்ட பொருளாளர் சங்கர் நன்றியுரை ஆற்றினார்
ரெட் நியூஸ் தமிழ் செய்திக்காக திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் குப்பன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments