Wednesday, September 23, 2026
Homeசெய்திகள்"களிமண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி!" - விநாயகர் சதுர்த்திக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்!

“களிமண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி!” – விநாயகர் சதுர்த்திக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்!

“களிமண் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி!” – விநாயகர் சதுர்த்திக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய வழிகாட்டுதல்கள்!

 

 

சென்னை:

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கில் விநாயகர் சிலைகளைக் கரைப்பது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி, மாவட்ட நிர்வாகத்தால் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

செய்ய வேண்டியவை (Do’s):

  • சுற்றுச்சூழல் உகந்த சிலைகள்: களிமண்ணால் செய்யப்பட்ட இயற்கை சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • இயற்கை வண்ணங்கள்: நீர் சார்ந்த, நச்சுத்தன்மையற்ற மற்றும் இயற்கையாக மட்கக்கூடிய சாயங்கள் மற்றும் மரப்பிசின்களை மட்டுமே சிலைகளுக்குப் பூச வேண்டும்.

  • இயற்கை அலங்காரம்: உலர்ந்த பூக்கள், வைக்கோல், இலைகள் மற்றும் துணிகளை மட்டுமே அலங்காரத்திற்கும் பந்தல்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

  • மீண்டும் பயன்படுத்தக்கூடியவை: பிரசாத விநியோகத்திற்கு மட்கக்கூடிய அல்லது மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளைப் பயன்படுத்த வேண்டும்.

  • மின்விளக்குகள்: அலங்காரத்திற்கு ஆற்றல் குறைந்த LED பல்புகளைப் பயன்படுத்த வேண்டும்.

செய்யக்கூடாதவை (Don’ts):

  • PoP மற்றும் பிளாஸ்டிக் தடை: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோல் கலந்த சிலைகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  • ரசாயன வர்ணங்கள்: நச்சுத்தன்மை வாய்ந்த செயற்கை வர்ணங்கள், எனாமல் அல்லது எண்ணெய் சார்ந்த சாயங்களைப் பூசக் கூடாது.

  • ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்: ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், ஸ்ட்ராக்கள் மற்றும் தெர்மோகோல் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது.

  • அனுமதி இல்லாத இடங்களில் கரைக்கத் தடை: மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்படாத ஏரி, குளம் அல்லது ஆறுகளில் சிலைகளைக் கரைக்கக் கூடாது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments