Monday, August 31, 2026
Homeஉலகம்செங்கடலில் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது தாக்குதல்: மூழ்கிய கப்பல்! 13 இந்தியர்கள் மீட்பு!

செங்கடலில் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது தாக்குதல்: மூழ்கிய கப்பல்! 13 இந்தியர்கள் மீட்பு!

செங்கடலில் இந்தியக் கொடி ஏந்திய கப்பல் மீது தாக்குதல்: மூழ்கிய கப்பல்! 13 இந்தியர்கள் மீட்பு!

 

 

வாஷிங்டன் / புது டெல்லி: செங்கடலில் ஏமன் கடற்கரை அருகே பயணித்துக் கொண்டிருந்த இந்தியக் கொடி ஏந்திய வணிகக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தது என்ன? ஏமனின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஹோடைடா (Hodeidah) துறைமுக நகரத்திற்குத் தெற்கே சுமார் 13 கடல் மைல் தொலைவில் MSV Faize Noore Oliya என்ற இந்தியக் கொடி ஏந்திய கப்பல் சென்று கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இக்கப்பலில் 13 இந்தியர்கள் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்தனர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து செயல்பட்ட ஏமன் மீட்புக் குழுவினர், கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 14 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். மீட்புப் பணிகளுக்குப் பின் தாக்குதலுக்குள்ளான கப்பல் கடலில் மூழ்கியது.

இந்திய அரசின் தீவிர நடவடிக்கை: இச்சம்பவத்திற்குக் கடும் கவலை தெரிவித்துள்ள இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், மீட்கப்பட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குநருக்கு (DG Shipping) உத்தரவிட்டுள்ளார்.

மேலும், ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் ஏமன் அதிகாரிகளுடன் இணைந்து இந்தியர்களின் பாதுகாப்பான வருகைக்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செங்கடலில் தொடரும் பதற்றம்: ஏமனில் செயல்பட்டு வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பாப்-எல்-மண்டேப் (Bab-el-Mandeb) நீரிணைப் பகுதியில் தொடர்ச்சியாக வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சர்வதேச வர்த்தகப் பாதையில் தடையற்ற கடல்வழிப் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments