Monday, August 31, 2026
Homeசெய்திகள்ஓசூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான்! 20,000 பெண்களுக்கு இலவச காப்பீடு: முன்னாள் எம்பி நரசிம்மன் அதிரடி...

ஓசூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான்! 20,000 பெண்களுக்கு இலவச காப்பீடு: முன்னாள் எம்பி நரசிம்மன் அதிரடி அறிவிப்பு!

ஓசூரில் போதைப்பொருள் விழிப்புணர்வு மாரத்தான்! 20,000 பெண்களுக்கு இலவச காப்பீடு: முன்னாள் எம்பி நரசிம்மன் அதிரடி அறிவிப்பு!

 

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ‘நாம் தலைவர்கள்’ இயக்கத்தின் சார்பில், போதைப்பொருள் இல்லாத சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 5 கிலோமீட்டர் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

உற்சாகத்துடன் பங்கேற்ற பொதுமக்கள்:

ஓசூர் தளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தில், “போதைப்பொருள் இல்லாத ஓசூரை உருவாக்குவோம்” என்ற முழக்கத்துடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற விழாவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ‘நாம் தலைவர்கள்’ இயக்கத்தின் முக்கியப் பிரமுகருமான சி. நரசிம்மன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெகதீஷ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கிப் பாராட்டினர்.

அண்ணாமலை வழிகாட்டுதலில் விழிப்புணர்வு:

செய்தியாளர்களிடம் பேசிய சி. நரசிம்மன், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி, தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை கடற்கரை தூய்மைப் பணியும், மறைந்து போன 8,700 ஏரிகளை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது” என்றார்.

20,000 பெண்களுக்குப் பொற்காலத் திட்டம்:

செப்டம்பர் மாதத்தைப் பெண்களுக்கான பாதுகாப்பு மாதமாக அனுசரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்த நரசிம்மன், “வருகிற செப்டம்பர் 20-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். இதில் கிராமப்புறப் பெண்கள், சுயஉதவிக் குழுவினர் எனச் சுமார் 20,000 ஏழைப் பெண்களுக்கு ‘இலவச காப்பீட்டுத் திட்டம்’ தொடங்கி வைக்கப்படும்” என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

போதைப்பொருள் இல்லாத சமூகம் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் முழு ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments