Monday, August 31, 2026
Homeவேலைவாய்ப்புஇந்திய ரயில்வேயில் 4,098 காலிப்பணியிடங்கள்; ₹35,400 தொடக்கச் சம்பளம் – RRB புதிய அறிவிப்பு வெளியீடு!

இந்திய ரயில்வேயில் 4,098 காலிப்பணியிடங்கள்; ₹35,400 தொடக்கச் சம்பளம் – RRB புதிய அறிவிப்பு வெளியீடு!

இந்திய ரயில்வேயில் 4,098 காலிப்பணியிடங்கள்; ₹35,400 தொடக்கச் சம்பளம் – RRB புதிய அறிவிப்பு வெளியீடு!

 

சென்னை: இந்திய ரயில்வே நிர்வாகம் பணியாளர் நியமனத்திற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer) மற்றும் டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டண்ட் (Depot Material Superintendent) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 4,098 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹35,400 தொடக்கச் சம்பளம் வழங்கப்படும்.

காலிப்பணியிட விபரம்: ஜூனியர் இன்ஜினியர் (JE), டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டண்ட் மற்றும் கெமிக்கல் & மெட்டலர்ஜிக்கல் அசிஸ்டண்ட் (CMA) உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 4,098 பணியிடங்கள் காலியாக உள்ளன.

மின்சாரம் (Electrical), மின் பணிமனை (Electrical Workshop), டிராக் மெஷின் (Track Machine), டீசல் மெக்கானிக்கல், வெல்டர், சிவில், மெக்கானிக்கல், டீசல் எலக்ட்ரிக்கல் மற்றும் மெட்டீரியல் சூப்பிரண்டண்ட் போன்ற பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி: குறிப்பிட்ட பணியிடத்தைப் பொறுத்து தகுதிகள் மாறுபடும். சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ (Diploma) அல்லது பி.எஸ்சி. (B.Sc.) பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

வயது வரம்பு:

  • அனைத்துப் பணியிடங்களுக்கும்: 18 முதல் 33 வயது வரை.

  • வயது வரம்புத் தளர்வு: அரசு விதிமுறைகளின்படி SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு (PwD) 10 ஆண்டுகளும் தளர்வு உண்டு.

சம்பளம்: மத்திய அரசு ஊதியக் குழுவின் ‘நிலை 6’ (Level 6)-ன் படி, மாதம் ₹35,400 தொடக்கச் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

  1. முதல்கட்ட கணினி வழித் தேர்வு (CBT-1)

  2. இரண்டாம்கட்ட கணினி வழித் தேர்வு (CBT-2)

  3. சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification)

  4. மருத்துவப் பரிசோதனை (Medical Test)

விண்ணப்பக் கட்டணம்:

  • SC / ST / பெண்கள் / EBC பிரிவினர்: ₹250 (முதல் கட்டத் தேர்வில் பங்கேற்ற பிறகு இத்தொகை முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும்).

  • இதர பிரிவினர்: ₹500 (தேர்வில் பங்கேற்ற பிறகு ₹400 வங்கிச் கணக்கில் திருப்பி அளிக்கப்படும்).

  • கட்டணத்தை இணையவழியில் (Online) மட்டுமே செலுத்த வேண்டும்.

முக்கிய தேதிகள் & விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 14.08.2026

  • விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 13.09.2026

  • அதிகாரப்பூர்வ இணையதளம்: rrbapply.gov.in

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments